வேந்தன் : 6



நிக் கூறியதை எல்லாம் கேட்ட பூங்கோதைக்கு இவன் என்ன உளறுகிறான் என்ற எண்ணமே முதலில் தோன்றினாலும் அதெப்படி சிறு துளி ஆங்கிலமும் கலக்காமல் சுத்த தமிழில் கதையளக்கிறான் என்ற கேள்வியும் அவளது மண்டையை குடைந்தது..



அவன் கூறிய கதையை அவளால் நினைத்து கூட பார்க்க இயலவில்லை ஏனெனில் அவன் கூறுவது படி பார்த்தால் மூன்றாவது மனைவியாக அல்ல அல்ல காமுகியாக , ஆசை நாயகியாக வாழ்ந்திருக்கும் அந்தப் பெண்ணை தன்னுடைய இடத்தில் வைத்துப் பார்க்க பூங்கோதைக்கு துளியும் விருப்பமில்லை ..



இதற்குப் பெயர் காதலா வேறு பெயர் என்றுதான் அவளது உள்மனம் கூறியது இருந்தாலும் அவனிடம் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க,



அதைக் கண்டவன், " இப்போது சொல் பவளம் உனக்கு என்ன மாதிரி பழைய ஞாபகங்கள் வந்ததா?? "... என கண்களில் பழைய காதலை தேக்கிவைத்து கேட்டான்..



ஏனெனில் இப்போது அவர்களுக்கு தடை யாருமில்லையே என்ற துளி சந்தோஷம் அவனுக்குள் ஊற்றாக பெருகியது..



"எமக்கு நீர் சொல்லும் எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை இப்போது நான் செல்லலாமா??".. என அவள் கூற நிக் அயர்ந்து விட்டான் ..



இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது அவளோடு வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல அவன் நெஞ்சில் குடி இருக்க அவளுக்கு மட்டும் எப்படி மறந்துவிட்டது என நினைத்தான்..



"கொஞ்சம் முயற்சி செய்து பார் பவளம் எனக்கு உன்னைப் பற்றிய ஞாபகங்கள் வந்தது போல உனக்கும் வரும் "...என்று கூற , அவளோ அமைதியாக நின்றாள் அவளுக்கும் இந்த அரண்மனையில் வந்தது முதல் நீண்ட நாட்கள் பழகியது ரோஜா உணர்வு வந்தாலும் நிக் கூறுவது போல விஷயங்கள் எதுவும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை..



"இதோ பாருங்கள் எனக்கு துளியும் நியாபகம் வரவில்லை..இதை பற்றி என்னிடம் உரையாடி ஒரு பிரயோஜனம் இல்லை"... என்று கூறி அவனை விட்டு விலகி வந்து விட்டாள்..



அவனோ செய்வதறியாது நிற்க அவளோ அவனது கண்ணில் வழியும் காதலை கண்டவளுக்கு சர்வமும் அடங்குவது போன்ற எண்ணத்தை தான் கொடுத்தது..



மழை வேறு வெளுத்த கட்டி கொண்டிருந்தது இல்லையேல் அவள் இந்நேரம் அவள் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று இருப்பாள்..அரண்மனையின் கதவுக்கு அருகே நின்று கொண்டு அங்குமிங்கும் உழன்றுக் கொண்டிருக்க அவள் பின்னாலே நிக் சென்றவன் , "என்னுடன் வா"... என அவளை அவனது அறைக்கு அழைத்து சென்றான்..



அங்கே அலமாரியை திருப்பி அதில் வரையப்பட்டிருந்த வரைப்படத்தை காட்ட அது அச்சு அசலாக அவளது தோற்றத்திலே இருப்பது போல இருக்க அதே போன்று அந்த ஆடவனும் நிக் போன்ற தோற்றத்தில் தான் இருந்தான்..



அதைக் கண்டு குழம்பிய அவளோ அவனை பார்க்க , "என்ன பார்க்கிற?? நீயும் நானும் காதலிக்க துவங்கும் போது நான் ஆசைப்பட்டு நாம் நமக்காக வரைந்த ஓவியம் "..என்று அவன் கூற ,



அவளுக்கு நம்புவதா வேண்டாமா என புரியவில்லை.. ஏனெனில் நேற்று அவளை வேதனைப்படுத்தியவன் இன்று அவளது காலில் விழுந்து ஒரு கதையை கூறினால் என்னவென்று நினைப்பது என குழம்ப,



அவள் முகத்தை பார்த்து, " உன்னால் நான் கூற வருவதை நம்ப முடியவில்லையா என்னுடன் வா"... என  அவளது கையை நிக் பிடிக்க அவளோ உதறி தள்ளினாள்..



"எனை மணக்கும் ஆணை தவிர அந்நியன் எமை தீண்டும் உரிமை கிடையாது "...என்று கோபத்துடன் கூறியவளை பார்த்தவன், " மன்னித்துக் கொள் பவளம் நான் உன்னை தொட்டு இருக்க கூடாது என்னுடன் வா "...என்றழைத்தான்..



அவனுடைய தனிவான பேச்சை கண்டவளுக்கு வெகு ஆச்சரியம் வெறிக்கொண்ட வேங்கை போல இருந்தவன் எப்படி தனிவாக பேசுகிறான் என ஆச்சரியம் நிறைந்த விழிகளோடு அவனுடன் நடந்தாள்..



ஆனால் அவனுடன் அந்த அறையில் ஒன்றாக நின்ற சமயம் அவளுள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது ஏதோ ஒரு நினைவில் அவள் ஆட்கொண்டு இருந்தது என்னவோ உண்மை தான்..



அவனுடன் மாடியில் இருந்து கீழே வர அங்கே இருந்த காவலர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனது சிலை இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான், " உனக்கு நினைவு இருக்கிறதா பவளம்?? என்னை போலவே இருக்கும் சிலை"... என்க



அவளும் அந்த சிலையை பார்த்தவளுக்கு நிக்கை போலத்தான் தெரிந்தது ஆனால் அவளால் அவளது பழைய நியாபகத்தை மீட்க முடியவில்லை..



"இதோ பாருங்கள் நீங்கள் கூற வருவது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை".. என்று அவள் அவளுடைய உண்மை நிலையை எடுத்து உரைக்க,



அவனோ, " முயற்சி செய்து பார் பவளம்".. கிட்டத்தட்ட நிக் அவளிடம் இறைஞ்சினான்.. அவளும் சற்று மனமிறங்கி , "சரி நீ என் விரோதி என்றாலும் மற்றவர்களை வருத்தப்படுத்தி அதில் இன்பம் காணும் வர்க்கம் எங்களுடையது அல்ல ஆததால் நான் முயற்சி செய்ய முயல்கிறேன்".. என்றவள்,



அவனுடன் செல்ல அவனோ வேகமாக அந்த அரண்மனையை முழுவதும் சுற்றி காண்பித்தான் அப்போதும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை..



சலித்துக் கொண்டிருந்தவளை அழைத்து சென்றவன் அவனது சாரட்டை காட்ட அவளோ அதை பார்த்ததும் அதிர்ந்தாள் அவளது முக பாவனைகளையே கவனித்து வந்தவன் , "தொட்டு பார் பவளம் "..என்று கூற



அந்த வண்டியை கண்டதுமே அவளுள் பலவித மாற்றங்கள் எழுந்தது..



ஆம் அந்த வண்டியில் அவள் பயணம் செய்தது போல அவளுக்கு தோன்ற இதெப்படி சாத்தியம் என்று அவள் நெனைத்தாள் அவன் கூறியது போல வண்டியை தொட்டு பார்க்கவும் விறுக்கென்று ஏதோ ஒன்று அவளது நாடிக்குள் சீறி பாய்ந்து உள்ளே சென்றது போன்ற உணர்வு அவளுள் எழ அவளோ அதிர்ந்தாள்..



இந்த அதிர்ச்சி தானே நிக்கிற்கும் வேண்டும் ஆனால் அவளுக்கும் அந்த வண்டியை கண்டது முதல் பழைய நெனைவுகள் தட்டி எழுப்பப்பட்டன.. பல விஷயங்கள் அவள் மனதில் வந்து அலைமோத இந்த வண்டியில் முதன் முதலாக அவள் பயணிக்கும் போது அவள் துடித்த துடிப்பு தான் அவளுக்கு முதன் முதலாக அவளது மனக்கண்ணில் வந்து போனது..



அவளது அதிர்ச்சியை கண்ட நிக், " பவளம் இப்போதாவது நியாபாகத்துக்கு வந்ததா??"... என்க



அவளோ தலையை வெறுமே, " இல்லை "...என ஆட்டினாள்..



அவனோ , "உண்மையாக சொல்கிறாய்??? உண்மையை சொல் பவளம் "...என்க



பழைய நினைவில் அதிர்ச்சியில் இன்னும் வெளியே வராத பூங்கோதைக்கு பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க அவனது கேள்வி அவளது செவியை அடைந்தாலும் மூளையை சென்றடையவில்லை..



ஆம் ஆனால் நிக்கோ விடாமல், " பவளம் இங்கே வா இங்கே தான் நீ தங்கி இருந்த அறை வா அங்கே போகலாம் "...என அவளது கையை பிடித்து அங்கே அழைத்து செல்ல அவளோ மந்திரித்து விட்டவள் போல அவனது இழுப்புக்கு சென்றாள்..



அந்த அறை கதவை திறந்தவன் அங்கே பார்க்க அந்த இடத்தில் தான் இருவரும் தங்கள் உயிரை விட்ட இடம்..இன்னும் வேயப்பட்ட ஓட்டின் மீது ஆங்காங்கே இவர்கள் இருவரும் கதறி சிதைந்து போன கரி மண்டலம் இலேசாக ஆங்காங்கே காணப்பட்டது..



கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக இன்னும் அவர்களின் அடையாளம் அங்கே இருப்பது போல இருந்தது..



"பார்த்தாயா பவளம் இங்கே தான் நாம் நமது உயிரை விட்ட இடம்..இன்னும் கூட புகை மண்டலமாக காட்சி தருவது போல காட்சி அளிக்கிறது அல்லவா ?? இன்னும் உன்னுடைய கதறல் என் செவிப்பறையை விட்டு விலகவில்லை...உனக்கு எவ்வளவு வேதனையை அளித்து இருக்கும் அல்லவா?? "...என்று தானும் தான் அந்த தீயில் கரைந்து மாண்டு போனோம் என்பது நெனைவில்லமால் அவளுடைய வேதனையை எண்ணி வருத்தம் கொண்டு எப்படியாவது அவளுக்கு பழைய நினைவுகளை நினைவுப்படுத்தி விடும் வேலையில் நிக் இறங்க,



அதே நேரம் பூங்கோதையான பவளத்துக்கு நெனைவுகள் எழும்பப்பட்டு விட்டதே..இந்த அறையை அவளால் மறக்க இயலுமா ??



அன்றைய தினத்தை தான் மறக்க இயலுமா??



மணி வேந்தனுடன் பிடிக்காமல் அவனுடைய பணத்திற்கு தன் குடும்பம் தன்னை விட்டு விட்டார்களே என வருத்தம் கொண்டு இந்த அரண்மனையை மிதித்தால் அவளுடைய மணியாரோ அவளுக்கு காதல் என்றால் என்னவென்று கற்று கொடுத்தான்..



அவனுடைய மனைவிமார்கள் அவளை காணும் போதெல்லாம் சதா கரித்து கொட்டினாலும் அவளுடைய மணியார் அவளுக்கு அந்த வருத்தங்கள் எல்லாம் அவள் மனதில் தங்காதவாறு காதலை அள்ளி தெளித்தான்..



கொஞ்சம் கொஞ்சமாக அவளும் அவனது காதலில் கரைய அதற்கு அச்சாராமாய் இருவரும் கூடலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தான் அவர்கள் இருவரும் தீக்கு இரையானது..



ஆனால் அந்த அத்தியாயம் தான் முடிந்து போனதே என்று தான் அவளுக்கு தோன்றியது ஏனெனில் இப்போதும் அவள் பவளமாக  அவளுடைய மணியாரை காதலிக்கிறாள் அவளுக்கு பவளத்தின் நெனைவுகள் சாகாத வரை அவள் பவளமாக இருக்கும் வரை அவளுடைய மணியார் அவள் நினைவுகளில் இருப்பான்..



ஆனால் அவளோ பூங்கோதையாக அல்லவா அவள் இருக்கிறாள் ..பவளத்தின் நினைவு சுவடுகள் தான் அவளுள் தட்டி எழுப்பப்பட்டுள்ளது..அதில் பவளமாக அவள் தன்னுடைய காதலனுடன் செல்வாளா இல்லை பூங்கோதையாகவே இருப்பாளா என ஒரு கம்பியில் கயிறை கட்டி விட்டு நடக்கவிட்டது போன்ற நிலையில் தான் இருந்தாள்..



"என்ன பவளம் அமைதியாக இருக்கிறாய் உனக்கு நினைவு வந்து விட்டது தானே சொல்"... என்று கண்கள் மின்ன நிக் கேட்க



அவளோ, " ஆம்".. என்று மட்டும் கூறினாள்..



அதை கேட்டதும் நிக்கின் முகம் பிரகாசித்து பூங்கோதையை பார்க்க அவளோ தலையை குனிந்து நின்று கொண்டிருப்பவள் அருகில் சென்று அவளது தோளை தொட்டு, நல்ல வேளையாக உனக்கு நினைவு வந்து விட்டதே..அந்த கடவுளுக்கு நன்றி.. இந்த ஜென்மத்தில் நம்மை தொல்லை செய்ய நம் இருவரை பிரிக்க யாரும் வர போவதில்லை பவளம் நாம் இனியாவது நல்ல வாழ்க்கை வாழலாம்".. என்று கூற



"அது நடக்காது".. என்று அவள் கூறினாள்..



"ஏன்?? பவளம் இனி நம்மை பிரிக்க யாரும் இல்லையே "..என நிக் கூற



அவளோ, "அது முடிந்து போன அத்தியாயம் ..கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் என்னால் என் கடந்த ஜென்மத்தின் நினைவுகளை தோண்டி எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை"..



"என்ன சொல்கிறாய் பவளம்"..என்றான் சோர்வுடன்



"நான் இப்போது பவளம் அல்ல பூங்கோதை..ஒரு வெள்ளையன் பின்னால் பழைய நினைவுகளை சுமந்து கொண்டு வருவேன் என கனவிலும் நெனைக்காதீர்கள்"... என்று பட்டென கூறி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள் பூங்கோதை..


அத்தியாயம் : 1


வந்தே மாதரம்


1900 ஆம் ஆண்டு இந்திய நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த சமயம்...முதலாம் இந்திய விடுதலை இயக்கம் நடந்து கொண்டு இருந்த காலக்கட்டம் அது ...இன்றைய உலகம் போல எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் வளராத காலம் அது..மெய் ஞானம் வளர்ந்து இருந்த காலமது...


இந்திய மக்களே தம் சொந்த நாட்டில் அடிமைப்பட்டு கிடந்த காலம் அது...பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் பிழைக்க வந்த நாட்டையே கொள்ளையடித்து அந்நாட்டு மக்களை எல்லாம் தங்கள் அடிமைக்களாக்கி வந்த காலக்கட்டத்தில் பல நில சுவான்தாரார்களும் , பல குறு நில மன்னர்களும் , மன்னர்களும் ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்தும் ஆதரித்தும் வந்த காலகட்டம் ...


தம் நாட்டிலே அந்நியனுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம்..எம் மக்களுக்கு அவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்த காலம் அது.. ...பலர் தங்கள் உரிமைக்காக போராடியும் உயிர் நீத்தும் தன் நாட்டுக்காக சந்தோசமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு இருந்த காலகட்டம்..


அப்படி நாடே போராடிக் கொண்டு இருந்த வேளையில் அங்கே ஒரு சிறு பகுதி மக்களும் , " வெள்ளையனே வெளியேறு " ..என்று வீர முழக்கமிட்டு போராடி கொண்டிருந்தனர் அவர்களின் சொந்த தாய் நாட்டை கயவர்களிடமிருந்து மீட்பதற்காக..


அவர்கள் போராடிக் கொண்டிருந்த சிறு இடத்திற்கு பெயர் தான் கோசம்பத்தூர்(இந்நாளில் நம்முடைய கோசம்பத்தூர் தான் மருவி கோயம்புத்தூர் ஆனது )...


மாவீரன் திப்பு சுல்தான்  பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த கோசம்பத்தூரை தான் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து தங்கள் வசம் வைத்து கொண்டனர்... மேற்கே பாலக்காட்டு கணவாயும் வடக்கில் சகல்கட்டி கணவாய்க்கும் இடையே அமைந்து இருப்பதால் இந்த மாநகர் முக்கிய நகரமாக கருதப்படுகிறது...


வளங்களும் செல்வ செழிப்பும் இங்கே அதிகமாக இருப்பதால் ஆங்கிலேயர்கள் அந்த மாநகரை மட்டும் யாருக்கும் விட்டு கொடுக்கவில்லை முன் வரவில்லை...அவர்களின் நேரடி பார்வையின் வசமே கோசம்புத்தூரை வைத்திருந்தனர்..


பல முறை மைசூர் மகாராஜா கூட போரிட்டு கோசம்பத்தூரை கைப்பற்றி பார்த்தார்...ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டு கொடுக்கவில்லை இந்த மாநகரை...இறுதியில் ஆங்கிலேயர்களும் மைசூர் மகாராஜாவும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர்..


அதன் படி கர்நாடகாவை மைசூர் மகாராஜாவிடம் ஒப்படைத்து கோசம்புத்தூரை தங்கள் வசம் தக்க வைத்து கொண்டனர்...அப்படி ஒரு பெருமை பெற்ற ஒரு மாநகரில் தான் இந்த கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது...


ஒரு மாலை பொழுதினில் கார்மேகங்கள் கூட அங்கே நடந்து கொண்டு இருந்த வெள்ளையனுக்கு எதிரான நாடகத்தை ரசித்துக் கண்டு களித்து கொண்டு இருந்த தம் மக்களை கண்டு அவர்கள் நித்தம் அனுபவித்து வரும் கொடுமையை எண்ணி வருந்தி அந்த இயற்கை அன்னையே தன் மும்மாரியை பொழிய இருக்கும் வேளையில் ஒருத்தி மட்டும் இமைக்காது அந்த நாடகத்தை ரசித்து மெய் மறந்து அந்த கூட்டத்தில் அமர்ந்து இருந்தாள்..


அந்நாடகத்தில் கூறியதாவது, "இந்நாட்டை ஆழ நினைக்கும் பஞ்ச பிழைக்க வந்த ஈன கூட்டமே ..அண்டி பிழைக்க வந்த உனக்கு எங்களை ஆளும் அதிகாரத்தை யார் கொடுத்தது...


வெள்ளையன் எனும் நிறத்தை முகத்தில் ஒட்டி மனதால் கருமையை நிரப்பி இருக்கும் அந்நிய சக்தியே எங்கள் புண்ணிய பூமியை விட்டு வெளியேறி விடு ..உங்கள் எண்ணம் நாங்கள் உள்ளவரை நடக்காது..


இந்த பாரத நாடும், இந்நாட்டின் வளங்களும் , எம் மக்களும் எங்களுக்கு மட்டுமே எங்களை அடிமைப்படுத்தி அதில் உங்கள் வாழ்வை வாழ வேண்டும் என்று நெனைப்பீர்களாயின் அந்த கூற்றை தவிடு பொடியாக்க தான் நாங்கள் பிறப்பெடுத்துள்ளோம்...


எம் மக்களின் உயிரைக் காக்க தங்கள் உயிரை கூட துறக்க தயாராக இருக்கும் எம் குலம் இருக்கும் வரை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது வெள்ளையனே..என் நாட்டில் பிச்சை எடுக்க வந்து எங்களையே ஆழ நெனைக்கிறாயா??? ..உம் எண்ணம் ஒருக்காலும் நடக்காது..பொங்கி எழு இந்திய தேசமே... "...என தன் முறை மாமன் தன்னை திருமண செய்ய போக இருக்கும் செழியனின் வீர முழக்கத்தை மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தாள் பூங்கோதை...


தன் தாயின் தமையன் செழியனுக்கும்,  பூங்கோதைக்கும் கிட்டத்தட்ட இருபது வயது வித்தியாசம் என்றாலும் தன் தந்தை இந்த நாட்டுக்காக உயிர் நீத்த பின் பூங்கோதையின் தாயையும் அவளையும் கவனித்து வரும் அவளின் செழியன் மாமா...


செழியனை அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதாவது அவள் அவனின் மாமா என்பதற்காக அல்ல..அவன் இந்த தாய் திருநாட்டிற்காக பாடுபட்டு போராடி அதற்காக அவன் சிறை சென்று வரும் ஒரு போர் வீரன் ..அதற்காகவே  அவனை அவளுக்கு பிடிக்கும்..அவனை விட அவனின் நாட்டு பற்றையே மிகவும் நேசிக்கிறாள்...


அவனது உரையை கேட்க மட்டுமே அந்த குக்கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து மெய் மறந்து அமர்ந்து இருப்பது போல அவளும் மெய் மறந்து தன்னையே கொடுக்க காத்து இருக்கிறாள் செழியனின் பதிலுக்காக..இந்த போராட்டம் ஒரு முடிவு வந்தால் மட்டுமே செழியனிடம் இருந்து பதில் வரும் பூங்கோதையின் தாய் புலம்பி கூறுவதை மட்டும் பல முறை கேட்டு இருக்கிறாள்...



அப்போது கூட பூங்கோதை , "என்ன ஆகிடுச்சு இப்போ எதற்கு நீங்கள் எப்போதும் அழுதிட்டு இருக்கீங்க அம்மா???...மாமா நம்ம நாட்டுக்காக தான் போராடிட்டு இருக்காங்க!!... அவர் எப்போ ஜெயிச்சு நம்ம நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைக்குதோ அப்போ தான் நான் அவரை திருமணம் செய்வேன்...மாமாக்கு எவ்ளோ வயசானலும் சரி..நான் மாமாவை கட்டிக்கிறேன் "...என்று அந்த பதினெட்டு வயது பெண் வீர முழக்கம் போடுவதை கண்டு ரசித்த பூங்கோதையின் தாய் அதே நேரம் செழியன் மற்றும் பூங்கோதையின் திருமணத்தை மனக்கண்ணில் காணவும் தவறவில்லை..


அதே சமயம் தன் நாட்டுப் பற்றையும் விட்டு கொடுக்கவில்லை...ஆம் வீட்டில் உள்ள பெண்கள் முதல் கருவில் இருக்கும் குழந்தை வரை தாய் நாட்டின் மீது பற்று வைத்திருக்க பூங்கோதையின் குடும்பம் மட்டும் விதிவிலக்கு அல்லவே...


ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்க நாடகத்தை கண்டு இருந்த அனைவரும் "வந்தே மாதரம்".. என்று முழங்க பூங்கோதையும் எழுந்து நின்று, " வந்தே மாதரம் "..என்று முழங்கினாள் அந்த மரதமிழச்சி..எல்லோரின் முழக்கத்தை கண்ட செழியனும் உணர்ச்சி பிரவாகம் எடுத்து , "வந்தே மாதரம்"... என்று முழங்கி கொண்டு இருக்கும் வேளையில் ஒரு கூட்டம் அங்கு வந்தது...


ஆம் அது அவர்களே தான் ஆங்கிலேய படையினர்...ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய படைவீரர்கள் வந்து தங்களுக்கு எதிராக தங்கள் சட்டத்திற்கு புறம்பாக கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தினரை கலைக்கும் பொருட்டு ஒரு நீண்ட ஊர்தியில் வந்திறங்க,


அங்கே மேடையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதி இருந்த கோஷப் பதாகைகளை கண்டு ஒரு ஜோடி கோப விழிகள் உறுத்து விழித்தது...


"சார்ஜ்".. என்று ஆங்கிலேயத்தில் தன் படையினருக்கு அந்த கோப விழிகள் அந்த வெள்ளை படைகளுக்கு உத்தரவு அளிக்க வேகமாக அங்கே அமர்ந்து இருந்தவர்களை எல்லாம் அவர்கள் சரமாரியாக தங்கள் கையில் இருந்த பிரம்பால் தாக்கினர்...


அப்போதும் மக்கள் ஓடி களைந்து கொண்டு இருந்தாலும் அங்கே நின்று ஆங்கிலேயனிடம் அடி வாங்கி கொண்டு இருந்த செழியன் மற்றும் கூட்டாளிகள் நிறுத்தாமல் , "வந்தே மாதரம்!!!..வெள்ளையனே வெளியேறு "..என்று கூக்குரல் விடுத்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பறை சாற்றும் விதத்தில் முழங்க அதைக்கண்டு கொண்டே அந்த ஜீப் வண்டிக்குள் அமர்ந்து இருந்தான் தான் நிக்கோலஸ் ஜார்ஜ் ஹென்றி ...


அவன் தான் இந்த கோசம்புத்தூர்க்கு புதிதாக மாற்றல் வாங்கி வந்து இருக்கும் கவர்னர்....அவன் வசம் தான் அந்த மாநகர் முழுவதும் கிட்டத்தட்ட அந்த மாநகரை ஆளும் ஒரு சர்வாதிகாரி...


சர் நிக்கோலஸ் ஜார்ஜ் ஹென்றி பெயரை போலவே நீளமானவன் தான் ...அதே போல அவனது கால்களுக்கும் நீளம் அதிகம் போலும்...அவன் ஜீப்புக்குள் அமர்ந்து இருந்தாலும் அவனது நீளமான கால்கள் வெளியே நீட்டி கொண்டிருந்தது...


அவனது ஒற்றை விழிப் பார்வை போதும் எதிரே இருப்பவர்களின் சப்த நாடிகளும் அடங்க...அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இருந்த அந்த பிரௌன் நிறத்தவன் அந்த ஜீப்பில் இருந்து உறுத்து விழித்து ஜீப்பை விட்டு கீழே இறங்கியவன் தன் கர்ஜனை மொழியில், "அர்ரெஸ்ட் ஹிம் அண்ட் ஹிஸ் காங்"...என்று தன்னுடன் நின்று கொண்டு இருக்கும் காவல் அதிகாரி ஜான் பீட்டருக்கு செழியனையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்யும்படி ஆணை பிறப்பிக்க ,


ஜானும் அதற்கு தான் காத்து இருந்தது போல அவனும் அவனது சகாக்களும் களத்தில் இறங்க, அங்கே நின்றுக் கொண்டிருந்த அனைவரையும் பிடித்தனர் எஞ்சிய சிலர் தங்கள் உயிரை காத்து கொள்ள ஓடினர்...அவர்களையும் பிடிக்க பாய்ந்தனர் ஆங்கிலேய காவல் துறையினர்...



நிக்கோலஸ்யை பற்றி கூற வேண்டுமெனில் கோபத்தின் உறைவிடம் ...இது போன்ற கூட்டம் நடத்தி அவர்களின் அரசைப் பற்றி அவதூறு பரப்பி வரும் மக்களை கொல்ல கூட தயங்காத கொடூரமானவன் ...பார்ப்பதற்கு தான் ஒன்றுக்கும் உதவாத மைதா நிறத்தில் இருந்தாலும் , மொழு மொழுவென முகத்தை கொண்டு இருந்தாலும் அவன் முகத்தில் நிலைத்து இருக்கும் கடுமையை உணர்ந்தவர்கள் இது போன்ற கூட்டத்தை அவர்களுக்கு எதிராக கூட்டி இருக்க மாட்டார்கள்...


அவனுக்கு சரி எது தவறு என்ன என்று எல்லாம் பிரித்து பார்த்து கொண்டு இருக்கும் சமயம் எல்லாம் இருக்காது..அது அவனின் தேவையும் அல்லவே...எதிராளி பேசும் முன் அவனது கை ஓங்கி இருக்கும்... இது போன்ற ஏதாவது கூட்டம் என்று அவனுக்கு தகவல் கிடைத்து விட்டால் போதும் உடனே வந்து விடுவான் அவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டி விட்டே அங்கிருந்து செல்வான்...பிடிப்பட்டவர்களுக்கு மிக கொடுமையான தண்டனைகளும் அவன் அளிப்பான்...அந்த அளவுக்கு அரக்க குணத்தைக் கொண்டவன் தான் அந்த அயல் நாட்டு விசுவாசி...


முன்பு கூடல் நகரை ஆட்சி புரிந்து வந்தவன் இந்த கோசம்புத்தூர் மாநகருக்கு வந்து இரு தினங்களே ஆனது...கூடல் நகரில் வாழும் மக்களை இவன் எப்படி அடக்கி ஆண்டு வந்தான் என அவர்களிடம் கேட்டால் தெரியும் அம்மக்களை எல்லாம் தன் விரல் நுனியில் நிற்க வைத்து இருந்தான்...


அப்படி இருப்பவன் தான் இங்கே வந்து இருக்கிறான் அவன் கண்ணில் தான் இந்த அரிய காட்சியும் பட்டு இருக்கிறது... அவனது உத்தரவு வந்த மறுநொடி ஜான் அவர்களை தாக்க தொடங்கினான் ...ஜான் வெறிப்பிடித்தவன் போல இதற்கு எல்லாம் காரணமான செழியன் மற்றும் கூட்டாளிகளை தாக்க ,


ஜானின் பூட்ஸ் காலின் வலியை பொறுக்க முடியாத செழியன் , "அம்மா".. என்று அலறும் சத்தம் கேட்ட பூங்கோதை, " வந்தே மாதரம்..வந்தே மாதரம் "..என்று அலறிக் கொண்டே ஓடிய அவளுக்கு மிக சரியாக கேட்டது செழியனின் குரல் கேட்டதும் திரும்பி தன் மாமன் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள்..


அவளும் அந்த கலவரத்தில் ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்கு அலறிக் கொண்டே ஓடியவள் தான் ஆனால் அதே நேரம் கூட்டத்தில் தன் மாமனை தேடிக்கொண்டு இருந்தாள்..அந்நேரம் பார்த்து தான் செழியனின் குரல் கேக்க திரும்பியவள் சற்று முன் வீர முழக்கம் முழங்கிய மாமன் இப்போது கதறுவதை கண்டு வெறிக் கொண்ட பெண் வேங்கையவள், " மாமா "..என்று கூக்குரல் இட்டு செழியனை நோக்கி ஓட அங்கே கூட்டத்தில் இருந்தவர்களுக்கு அந்த குரல் கேட்டதோ இல்லையோ ஆனால் மிக சரியாக அங்கே இறுமாப்பாக நின்று கொண்டு இருந்தவனின் செவியில் கனகச்சிதமாக கேட்டது...அந்நேரம் திரும்பிய நிக்கோலஸின் விழிகள் அந்த குரலுக்கு சொந்தக்காரியை தழுவி சென்றது...



"மாமா ", என்று செழியனை நோக்கி பூங்கோதையோட முற்படும் முன் அவளின் தோழி கயல்விழி பூங்கோதையை பிடித்து இழுத்து அந்த பக்கம் கூட்டி சென்று விட்டாள்...ஆனால் அப்படியும் அவர்கள் அனைவரும் பிடிப்பட்டனர் அதில் செழியன் மற்றும் கூட்டாளிகள் பெண்களில் பூங்கோதை மற்றும் அவளின் தோழிகள் சிலர் பிடிப்பட்டனர்...



இதோ பிடிபட்ட அனைவரும் நிக்கோலஸ் முன் நிற்கின்றனர்...ஆண் , பெண் பேதமின்றி அனைவரின் கைகளை கட்டி நிறுத்த வைக்கப்பட்டு இருக்க நிக்கோலஸ் அனைவரையும் பார்த்து கர்ஜனை மொழியில், "நீங்க செய்த தவறுக்கு ஆட்சிக்கு எதிராக நடந்த இந்த கூட்டம் நடத்திய குற்றத்திற்காக நீங்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறீர்கள் "...என்று கூறியவன் தன்னை முறைத்து பார்த்து கொண்டு இருக்கும் அந்த பெண்ணை கவனிக்க தவறவில்லை...


மேலும் ஜானின் வெறித்தனம் இன்னும் அடங்காமல் இருக்க பிடித்த அவர்களை எல்லாம் மீண்டும் அடிக்க முற்பட நிக்கோலஸ் தடுத்து நிறுத்தி விட்டான்...


"ப்ரிசன் தெம் ரைட் நௌ", (இப்போதே அவர்களை சிறைப்படுத்துங்கள்) என்று நிக்கோலஸ் ஆணையிட்டவன் அங்கே கைது செய்யப்பட்ட ஆண்களை எல்லாம் ஆண்கள் இருக்கும் பெண்களை எல்லாம் பெண்களை சிறைப்படுத்தும் சிறையில் அடைக்கப்பட அவளும் சிறைக்கு செல்ல நேர்ந்தது…


வேந்தன் : 2


ஆண்கள் அனைவரும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க பெண்கள் அனைவரும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்..


ஆம் செழியனையும் மற்றும் அவனது நண்பர்களை இரவோடு இரவாக அழைத்து சென்ற ஆங்கிலேயர்கள் அரசுக்கு எதிராக கூட்டம் நடத்தியதின் பேரில் அவர்களை சிறை செய்து அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட நீதிபதியோ விசாரணை செய்து அரசை அவமதித்த பிரிவில் அவர்கள் அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்..


அதே போல பெண்களுக்கோ இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது... மேலும் இவர்கள் அனைவரும் ஆங்கிலேய பதாகைகளை ஏந்தியபடி சிறையில் வலம் வர வேண்டும் என்றும் அவர் உத்தரவு இட்டார்..


அந்த நேரம் கூட பூங்கோதை சுற்றி பல ஆண்கள் நிற்கும் போது பூங்கோதையின் ரத்தம் மட்டும் கொதிக்க, " வெள்ளையனே வெளியேறு உன் பதாகைகளை நாங்கள் சுமப்போம் என்று கனவு காணாதே"... என்று முழங்க,


அதை கேட்ட அவள் அருகே காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலாளி அவளது கையை முறுக்கி லாத்தியால் அடிக்க அவளோ வலியால் துடித்தாள்..அவள் துடிப்பதை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து,


"என்னை அடித்து அதில் மகிழ்ச்சி காணும் ஈன பிறவிகளே உங்கள் மரணம் விரைவில் நிகழும்.."..என அவள் கூற அதை கேட்டதும் மேலும் அவளுக்கு இரண்டு அடிகள் விழுந்தது..


உடனே அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர்....

பூங்கோதையை மட்டும் இரண்டு நாட்கள் தனி சிறையில் அடைத்து அவளுக்கு உணவு தர மறுக்கப்பட்டது...


இரண்டு நாட்கள் கழித்து சிறையை பார்வையிட வந்த நிக்கோலஸ் முன் ஆண் மற்றும் பெண் கைதிகள் அனைவரும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்..அவனும் அவர்களை வரிசையாக பார்வையிட்டு கொண்டிருந்தான்...


அனைவரையும் ஒரு இகழ்ச்சி பார்வை பார்த்தவன் அவர்களிடம் , "ஆங்கிலேய ஆட்சி வாழ்க".. என்று மொழிய சொல்ல அவர்கள் அனைவரும் கூறாமல் நின்று கொண்டிருந்தனர்..அதில் செழியனும் உள்ளடங்க,


பதில் கூறாத அனைவருக்கும் சவுக்கு கயிரால் அடி விழ தோல் உரியும் அளவுக்கு அடிகள் விழுந்தன..பதில் கூறாதவர்களின் நாவினை அறுத்து விடுவோம் என்ற பயத்தை காட்ட பயம் கண்ணில் வர,


அதில் பாதி பேர், " ஆங்கிலேய ஆட்சி வாழ்க "...என்று முழக்கமிட அதை கண்ட நிக்கோலோசின் விழிகள் சிரிக்க அதில் ஒருத்தி மட்டும் கூட இருந்த அத்தனை பேரையும் எதிர்த்து மிக தைரியமாக , " மானம் கெட்ட ஈன பிறவிகள் ஒழிக".. என்று முழக்கமிட்டாள்..


அது மிக தெளிவாக நிக்கோலோசின் செவிகளில் விழுந்தது.. நிக்கோலஸிற்கு தமிழ் நாட்டிற்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனதால் தமிழ் மொழி அவனுக்கு புரிய, நிக்கோலஸின் விழிகள் கூர்மையானது..


அவனது செவிகளில் சீறிபாய்ந்த குரலை அவனால் மறக்க முடியவில்லை வேகமாக திரும்பி நிக்கோலஸ் பார்க்க அது அவளே.. ஆம் அன்றைய  கலவரத்தில் உரக்க முழக்கமிட்டவள்..தங்களது ஆட்சியை பற்றி குறை கூறிய பெண் இவள் என கண்டதும் கண்டு கொண்டான்..


இவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு அவர்களை எதிர்க்கும் ஆட்களை முளையிலேயே கிள்ளி விடுவர் இல்லையேல் ஆங்கிலேயர்கள் மீது பயம் உள்ள மக்களும் சேர்ந்து அவர்களை எதிர்க்க நேரிடும் என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்த நிக் அதிலும் ஒரு பெண் தன்னை எதிர்ப்பதா என்ற ஆத்திரம் அவனுக்கு சுடர் விட்டு எரிய மெல்ல திரும்பி அவளை கண்டவனுக்கு தெளிவாக அது அவள் தான் என புரிப்பட


மெல்ல அவள் அருகே தனது அழுத்தமான காலடிகளுடன் வர அதற்குள் காவல்துறையினர் அவள் அருகே சென்று அவளது கைகளை முறுக்கி , "நாங்கள் கூறியபடி சொல்"... என்று கூற,


அவளோ , "அதற்கு நான் மறு ஜென்மம் எடுக்க வேண்டும் "...என்று வீரமாக கூற,


" அப்படியானால் நீ மறுஜென்மம் எடுத்து விடு "..என்று கூறிய நிக்கோலஸ் தனது கரத்தை அவளது கன்னத்தில் பதிக்க அவனது கையின் சூட்டை உணர்ந்த அவளது முகம் விண்ணென்று தெறிக்க கூடவே அவளது உதடு கிழிந்து ரத்தம் வெளியே வந்தது..


அவளது முகம் வீங்கி போக அவனும் தனது பூட்ஸ் காலால் அவளை அவளது அடி வயிற்றில் எட்டி உதைத்து , "இனி ஏதாவது பேச வேண்டும் என்றால் இப்போதே பேசிக் கொள் அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க இயலாது"... கூறினான் நிக்கோலஸ்..


அவளோ கன்னத்தில் வாங்கிய அடி போதாதென்று வயிற்றிலும் அவன் மிதித்து இருக்க அவள் வலியால் துடித்து கதறினாள்..


அப்போதும் மனம் இளகாத நிக்கோலஸ், " இனி உன் ஜீவன் இருந்தால் மட்டுமே உன் வாயிலிருந்து வார்த்தை வரும் அவ்வாறு வார்த்தை வருமாயின் அது எங்கள் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாக்கே உமது வாயிலிருந்து வெளிவர வேண்டும் "..என்று ஒரு பெண் கதறிக் கொண்டிருக்கிறாள் என்ற இரக்கம் கூட இல்லாமல் அவளைப் பார்த்து துடித்து ஓடி வரும் செழியனையும் அவனது பூட்ஸ் காலால் மிதித்து அவனது பூட்சை துடைக்கும்படி செய்தான் ..


என்ன தான் நிக்கோலஸ் அடித்தாலும் மிதித்தாலும் அவளது கண்ணில் சிறுதுளி பயம் இல்லை..


அதை கண்டவனுக்கு மேலும் ஆத்திரமே எழுந்தது அதன் பயனாக அவளை அவன் புதிதாக மாறும் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய அனுமதித்தான்... அவளுக்கு முதலுதவி செய்து இன்றே அவள் அவனுடன் வருமாறு உத்தரவிட்டான்..


நிக்கோலஸ் மேலும் செழியன் மற்றும் அவனது கூட்டாளிகளை சிறையில் இருந்து தப்பித்து செல்வதாக கூறி மேலும் ஒரு வழக்கு பதிந்து நீதிபதி மற்றும் நீதிபதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனையாக மதராச சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்..


நடக்கவே இயலாமல் அடி வயிறை பிடித்தபடியே நிக் தற்போது வசித்து கொண்டிருக்கும் வீட்டிற்கு பயணம் தொடங்கியது அவளுடன் கூட இரண்டு வேலையாட்களும் வர அந்த வீட்டுக்கு சென்றதும் நிக் அவர்களை பார்த்து , "இன்னும் இரண்டு நாட்களில் இந்த வீட்டை சுத்தம் செய்து இருக்க வேண்டும்"..  என்று அந்த இரண்டு வேலையாட்களை அனுப்பி வைத்தவன்,


அங்கே வலியால் தவித்து கொண்டிருந்தவளை பார்த்து ஏளனமாக சிரித்து, " நீ என்னுடைய அறையில் உள்ள என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வை மானம்கெட்ட ஈன பிறவிகள் என்று தானே எங்களை பார்த்து கூறினாய்.. உன் மானம் எப்படி பறிபோக போகிறது என்பதை நீ பார்க்க தானே போகிறாய்..உன் இனமே எங்களிடம் அடிமைப்பட்டு இருக்கிறது உன் வர்க்கமே ஒரு அடிமை வர்க்கம் அதை மறந்து விடாதே ..அதிலும் நீ என் அடிமை".. என்று கூறியவன் அவனது பூட்ஸால் அவள் காலை மிதித்து விட்டு சென்றான்..


அவளோ மேலும் வலியால் துடிக்க அங்கே காவலில் நின்று கொண்டிருந்த காவலாளிகள் அவளை அவனது அறைக்கு  செல்ல பணிக்க அவளும் தன் உடல் வலியை மென்றபடி தன் தாய் நாட்டை எண்ணியபடி பணி செய்ய சென்றாள்..


நிக்கிற்கு சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற தோன்ற  பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் இருக்கும் ஒரு அரண்மனை தான் நிக்கிற்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்க இப்போது இருக்கும் வீட்டில் இருந்து அங்கே இடம் பெயற இருந்தான்..


ஆம் அந்த அரண்மனையை பற்றி கேள்விப்பட்டதும் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றி இருக்க அங்கே செல்ல ஆயத்தமானான்..அந்த அரண்மனையில் வேலை செய்யவென பணிக்காரர்களை இல்லையில்லை அவனது பாஷையில் அடிமைகளை தான் தேர்வு செய்ய அவன் வந்திருக்க அழைத்தும் வந்து விட்டான்..


இரண்டு நாட்கள் இப்படியே கழிய அவன் வசித்த வீட்டின் அனைத்து பணிகளையும் ஒற்றை ஆளாக பூங்கோதையை வைத்து செய்ய வைத்தான் நிக்..ஆம் அவள் தான் தனக்கான பணிவிடைகள் முதல் கொண்டு அனைத்தும் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தான்...


அந்த சமயம் பார்த்து ஒரு நாள் நிக், " என்ன உன் திமிர் குறைந்ததா?? உணவு உண்ணாமல் உடல் நொந்தால் உன் திமிர் குறைந்து விடும்"... என அவனுக்கு உணவு எடுத்து வைத்து கொண்டு இருந்தவளிடம் நக்கல் சிரிப்போடு கூற,


அவளோ உன் காலில் விழுந்து உணவை உண்டு என் உடலை வளர்த்து கொள்வேன் என்ற எண்ணமா?? நடக்கவே நடக்காது... உன்னால் மீறி போனால் என்ன செய்ய இயலும் ?? என்னை கொல்ல இயலும் அவ்வளவு தானே  ??  எடுத்து கொள் ஆனால் உன்னால் என்னை என்ன விதமாக கொடுமை படுத்தினாலும் என் மனதில் குடி கொண்டிருக்கும் என் நாட்டு பற்றை சிறு துளி கூட அசைக்க முடியாது" .. என்று கூற


அவள் அவனுக்காக தயாரித்த டீயை குடித்து கொண்டே அவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த நிக்கிடம்," இதோ நான் தயாரித்த உணவை நீ உட்கொள்கிறாயே என்னால் உன்னை கொல்ல முடியாது என்றா நினைக்கிறாய் ஆனால் உங்களை போல முதுகில் குத்தும் பழக்கம் எங்களுக்கு இல்லை..நாங்கள் நேர்மைவாதிகள் அதனால் நீ தைரியமாக நான் தயார் செய்த உணவை உண்ணலாம் இப்போதும் நாங்கள் தான் உங்களுக்கு படி அளக்கிறோம் அதை மறந்து விடாதே ".. என்று கம்பீரமாக கூற,


அதை கேட்ட அவனோ , கோபம் கொண்டு , "அப்போ இதோ இதை பரிசாக பெற்றுக்கொள் "..என கூறி அவன் குடித்து கொண்டிருந்த சூடான தேநீரை அவள் முகத்தில் ஊற்றினான்..


அவளோ வலியால் அலற , "சத்தம் வெளியே வரக்கூடாது சத்தம் வராமல் கதறு"... என்று கூறி விட்டு அவன் சென்று விட்டான்..


பூங்கோதையோ வலியால் அலறி துடிக்க நிக்கின் மீது உள்ள பயத்தில் எதிரொளியாக அந்த வீட்டில் உள்ள எவரும் அவளுக்கு உதவ வரவில்லை...


இருந்தும் அவள் இயன்ற வேலையை செய்ய அவன் ஓய்வு எடுக்க இருக்க போகும் அரண்மனைக்கு பத்து பேரை வீட்டு வேலை செய்வதாக இருந்த அவன் இறுதியில் யாரையும் அழைத்து செல்லாமல் இவள் மீது உள்ள கோபத்தில் இவளை மட்டும் அழைத்து சென்றான் நிக்..




அத்தியாயம் - 9


கனியை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்ற துவா சிறிது நேரம் எதுவும் பேசாமல் சுற்றுப்புறத்தை நோக்கிக்கொண்டு இருக்க... அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகை பந்தலில் தான் இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.


'என்ன இவரு ஏதாவது சொல்லுவாரு. இல்லனா கேட்பாரு, நம்ம மனதில் இருப்பதை சொல்லலாம்ன்னு பார்த்தால் சுத்தி பார்த்துட்டு இருக்கார்.சுற்றுலா வந்த மாதிரி...' மனதில் அவனை வறுத்துக் கொண்டு இருந்தாள் கனி.


அவன் தான் அவளின் மனதில் நிறைந்து இருப்பவன் என்று தெரிந்த பிறகும் இதே மனநிலை இருக்குமா..?


சுற்றுப்புறத்தை நோக்கியது போதும் என்று நினைத்தவன், தன் நிலவின் பக்கம் திரும்பி, "ஹாய் என் பெயர் துவாரகேஷ்... உங்க பேர் சொல்லுங்க. உங்களை பற்றி சொல்லுங்க. அப்புறம் நீங்க என்கிட்ட ஏதோ சொல்ல நினைக்குறிங்க அதையும் தயங்காமல் சொல்லுங்க." என்றான்.


அவன் புறம் திரும்பிய கனி, ஒருவாறு மனதை திடப்படுத்தி கொண்டு, " அது வந்து வ... ந்... து என்னை பிடிக்கலன்னு சொல்ல முடியுமா ப்ளீஸ்..? " என்று கேட்க...


"ஏன் " என்று கேட்டான்.


சிறிது தயங்கிக் கொண்டே... "என் மனசுல வேற ஒருத்தர் இருக்கார். அவரை தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாது. " என்று கூற...


துவா சற்றே அதிர்ந்தான். அவளுக்கு திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று தான் நினைத்தான். அவளின் மனதில் வேறு ஒருவன் இருக்கக் கூடும் என்று அவன் நினைக்கவே இல்லை. அவன் மனது சற்றே வலிக்க... தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டு,


அவள் புறம் திரும்பி, "உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்க மனசுல இருப்பது யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா..?"


"அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும். நீங்க என்னை பிடிக்கலனு சொல்லி திருமணத்தை நிறுத்தினால் மட்டும் போதும். " என்று கூற...


"அது எப்படிங்க சொல்ல முடியும். எங்க அம்மா ரொம்ப நம்பிக்கையோட கூட்டிட்டு வந்து இருக்காங்க. அவங்கள ஏமாற்ற முடியாது என்னால... எனக்கும் ஒரு கொள்கை இருக்கு பார்க்கும் முதல் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்று... "


அவன் இவ்வாறு சொல்லவும் வேறு வழி இல்லாமல் தன் மனதில் இருப்பவனை பற்றி கூறினாள். அவள் திருமண மண்டபத்தில் சந்தித்தவனை பற்றி கூற... முதலில் வலியுடன் கேட்க ஆரம்பித்தவன், அவள் சொல்ல சொல்ல அது தன்னை பற்றி தான் என்று புரிந்துக்கொண்டு, வானில் பறக்க ஆரம்பித்தான். விமானமே இல்லாமல்... ஒரு வேளை வேற யாரும் இருக்க கூடுமோ என்று பயந்து தேதி, மண்டபம் எல்லாம் விசாரிக்க, அவளும் சொல்ல இவனுக்குள் ஏக குஷி...


"அவரை விரும்புறீங்க சரி. அவர் பேர், ஊர், எதுவும் தெரியுமா..? அவர் பார்க்க எப்படி இருப்பார். " என்று கேட்க... ஏனெனில் துவா மனதில் சந்தேகம் தான் அவள் கண் முன்னே நின்றும் அவளுக்கு தன்னை தெரியவில்லை என்று...


"இல்லங்க நான் அவர் முகத்தை பார்க்கவே இல்லை. அதனால் அவர் வந்தால் கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அவர் நிச்சயம் என்னை தேடி வருவார்." என்று திடமாக கூற...


துவாவிற்கு தன்னவளின் காதல் உள்ளே தித்திக்க... "ஒரு வேளை அவர் வரவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க..? அப்படி உங்களின் நம்பிக்கை படி அவர் வந்துட்டா எப்படி உணர்வீங்க... எப்படி கண்டு கொள்வீங்க..?" என்று கேட்க...


கனி வெட்கத்துடனே, "அது வந்து... அவரின் ஸ்பரிசம் எனக்கு தெரியும். அதனை கொண்டு அவரை உணர்வேன்." என்று கூற...


"அது எப்படிங்க ஒரு ஸ்பரிசத்தை வைத்து உணர முடியும். அது ஒரு தடவை உணர்ந்தது. இது எல்லாம் சின்ன புள்ள தனமா இருக்குங்க " என்றான் நக்கலுடனே...


"இங்க பாருங்க... இந்த நக்கல் பண்ற வேலை எல்லாம் வேண்டாம். உங்களால சொல்ல முடியலைன்னா நான் போய் சொல்லிக்கிறேன் ஆள விடுங்க. " அவனிடம் கோபமாக கூறியவாறு கீழே இறங்கி செல்ல...


அவளின் கோபத்தை கண்டவன், தனக்குள்ளே புன்னகைத்தவாறு, தன் காதலை அவளிடம் சொல்லாமல் தன்னை அவளிடம் உணர வைக்க எண்ணியவன், அவளின் காலை லேசாக இடறி விட... அவள் தடுக்கி விழ போக இவனின் வலிய கரங்கள் அவளின் இடையை தாங்கி கொண்டன.


அவனின் பற்றுதலில், தன்னவனின் ஸ்பரிசம் உணர்ந்தவள், மகிழ்ச்சியாகவும் அதிர்ச்சியாகவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்... சற்று திகைப்புடனே...


'அவனே தானா..?' அவளின் கண்களில் மின்னல் வந்தது. அவளின் மகிழ்ச்சியை பார்த்தவன், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் இடை பற்றி அருகே இழுத்தான்.


அவனின் விருப்பமான அவளின் இடையை இறுக பற்றி கொண்டு, அவளின் மச்சத்தில் விளையாட ஆரம்பித்து விட்டான். தன்னவன் தன்னை தேடி வந்து விட்டான் என்ற சந்தோஷ மிகுதியில் இருந்தவள், அவனின் அடுத்த அடுத்த தாக்குதலை அவள் உணரவே இல்லை.


அவனின் ஸ்பரிசம் அவளை ஏதோ செய்ய...


அவளின் கண்களில் மின்னலை கண்டவன், தன்னோடு நெருக்கி கட்டிக்கொண்டான். அவளின் உறை நிலை அவனை இன்னும் முன்னேற தூண்டியது. அவள் முகம் நோக்கி குனிய... அவன் செய்ய வருவதை புரிந்துக்கொண்டவள், அவனை தடுத்து தள்ளி விட பார்க்க...அவன் பிடி உடும்பு பிடியாக இருக்க...அவளால் அவன் கை சிறையில் இருந்து வெளியே வர இயலவில்லை...


முகம் நோக்கி குனிந்தவன், அவளின் இதழில் புதைந்துக் கொண்டான். அன்று தெரியாமல் செய்ததை இன்று தெரிந்தே செய்தான். அவனை தடுக்க பார்க்க முடியாமல், அவன் தரும் உணர்வுகளை உள்வாங்கினாள்.ஆனாலும் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவனின் இதழ் யுத்தம் முற்று பெறாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்க... ஒரு கட்டத்தில் தன் உணர்வுகளை அடக்க இயலாமல் அவனின் பிடரிக்குள் கையை நுழைத்து அவனின் முடியை இறுக்கினாள்.


ஏற்கனவே அவளின் இதழ் சாறை பருகி கொண்டு இருந்தவன், அவளின் இந்த செய்கையால் இன்னும் இன்னும் ஆழமாக அவளின் இதழில் புதைந்தவன், சற்றே தன் இதழ்களை கீழே அவளின் கழுத்தில் இறக்க... அதுவரை அவனில் மூழ்கி இருந்தவள், அவனை விலக்க பார்க்க... இந்த கள்வன் விலகினால் தானே..! அவன் தான் வேறு உலகில் இருந்தானே! இன்னும் சற்று கீழே அவளின் நெஞ்சில் முகம் புதைக்க முயற்சிக்க... சுதாரித்து வேகமாக அவனை தள்ளி விட்டாள்.


அவள் தள்ளிய பிறகு... சுயநினைவுக்கு வந்தவன், அவனின் செயலால் சிவந்த அவளின் முகம் பார்க்க, அது கோபத்தாலும், வெட்கத்தாலும் சரி விகிதமாக சிவந்து இருந்தது. வெகு நாள் கழித்து சந்தித்ததால் வந்த ஏக்கமும், தன்னவளின் அருகாமையும், மல்லிகை வாசமும், அவனை கிறங்க செய்ய கொஞ்சம் அத்து மீறி விட்டான். தன்னவளிடம்...


சற்றே தன்னை ஆசுவாச படுத்தியவன், அவளை கூர்மையாக பார்த்து... "நீ உன் மனதில் யாரை வேணாலும்நினைத்து கொள். எனக்கு எங்க அம்மா விருப்பம் தான் முக்கியம். நீ தான் எனக்கானவள். " என்று சொல்ல... கோபம் வந்தாலும் அவன் முகம் பார்க்கும் போது அந்த கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை அவளால்...


இருவர் மனதில் இருந்த காதலும், சேருவோமா, இருவரும் பார்த்து கொள்வோமா என்ற அவர்களின் தவிப்பும் அவர்களை எல்லை மீற வைத்து விட்டது.


தன் கோபத்தை விடுத்து, அவனை பார்க்க அவனும் அவளை பார்த்து புன்னகைக்க... அந்த புன்னகையில் மயங்கியவள், அவனை காதல் வழியும் கண்களால் பார்க்க... அவளை பார்த்து இரு கரங்களையும் விரித்து "வா" என்று அழைக்க... அவளும் ஓடி வந்து அவனின் மார்பில் சரண் புகுந்தாள்.


இருவர் மனதிலும் அவ்வளவு நிம்மதி... இவ்வளவு நாள் இருந்த வலியும், சொல்ல முடியாத காதலும் கை சேர... அவன் மார்பில் தஞ்சம் அடைந்தவள், தன் இடம் வந்து சேர்ந்த திருப்தியில் இருந்தாள்.


இவர்கள் இருவரும் இவ்வாறு தங்களை மறந்த நிலையில் இருக்க... போய் ரொம்ப நேரம் ஆச்சே என்று அவர்களை அழைக்க அனிதா வர... இந்த காட்சியை கண்டு அதிர்ந்து நின்று விட்டாள்.


'அடப்பாவிங்களா..! இவ என்னமோ காதல் கதை சொன்னா. அவரு என்னவோ அமைதியா மேல கூட்டிட்டு வந்தாரு. இங்க வந்து பார்த்தால் என்ன டா சீனே மாறி போய் இருக்கு. அப்படி என்ன தான் நடந்து இருக்கும்.' மனதிற்குள்ளே பேசிக் கொண்டவள்,


அவர்களை அழைக்க நினைத்து, "கனி... கனி" என்று அழைக்க... அவள் தான் வேற உலகில் இருந்தாளே! இவள் கூப்பிடுவதும் காதில் விழுமா..?


சற்றே உரக்க அழைக்க... வேகமாக அவனை பிரிந்து, சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். அதன்பின்பே, அனிதா கூப்பிடுவது தெரிய... சற்றே சிவந்த முகத்துடன் அவளை நோக்கி சென்றவள், இவனை பற்றிய யோசனையில் கீழே இறங்கி சென்றாள். 'மண்டபத்தில் அவ்வளவு நடந்தும் இவனுக்கு தன்னை நினைவில் இல்லையா. ' என்று நினைத்து கொண்டே... இவனும் தலை கோதி தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளின் பின்னே சென்றான். ஒன்றுமே நடக்காதவாறு...


அனிதா தான் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாமல், அவளும் இறங்கி வர... கீழே இரு வீட்டாரும் பேசிக்கொண்டு இருக்க... கனி தன் அன்னையின் அருகே போய் நின்றுக்கொண்டாள். நல்ல புள்ளையாக... அவள் அருகே வந்து நிற்கவும் அவளின் பெற்றோர் அவள் முகம் பார்க்க... அவர்களின் முகம் பார்த்தவள், வெட்கத்துடன் 'சம்மதம் ' என்று தலை அசைக்க இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


துவா தன் தாயின் அருகே வந்து அமர, சந்தோஷ் அவனின் காதருகே குனிந்து, "ஏன்டா, பேசிட்டு வர இவ்வளவு நேரமா அப்படி என்ன டா பண்ணீங்க மேல..?" என்று கேட்க...


துவா வெட்கத்துடனே, "ஒன்னும் இல்லை டா மச்சான் சும்மா தான் பேசிட்டு இருந்தோம். " என்று கூற...


கனி தன்னவனின் வெட்கத்தை தூர இருந்தே ரசிக்க... ஆண்களின் வெட்கமே தனி அழகு தானே..! அவளின் தோழிகள் தான் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தார்கள். 'மேல போகும் போது டல்லா இருந்தா... இப்போ என்ன தவுஸண்ட் வார்ட்ஸ் பல்பு மாதிரி பிரகாசமா இருக்கா..!' அனிதாவிடம் ஜாடையாக கேட்க... அவளும் தனக்கு தெரியாது என்று உதட்டை பிதுக்கினாள்.


'பிறகு விசாரிப்போம் ' என்று நினைத்து கொண்டவர்கள், பெரியவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தனர்.


கேசவன், துவாவின் தாயிடம் திரும்பியவர், "எங்களுக்கு உங்க அளவுக்கு வசதி இல்ல சம்மந்தி அம்மா... எங்களால முடிஞ்சதை எங்க பொண்ணுக்கு செய்வோம். " என்று கூற...


"உங்க பொண்ணுக்கு நீங்க செய்யுறிங்க உங்க விருப்பப்படி செய்ங்க. உங்க தகுதியை குறைத்து மதிப்பிடாதீங்க. எவ்வளவோ பொண்ணு பார்த்தேன். என் பையனுக்கு பிடிக்கல, தட்டி கழிச்சுட்டே வந்தவன் உங்க பொண்ணை தான் ஓகே பண்ணி இருக்கான். அதுவே எனக்கு அவ்வளவு சந்தோசம்... யாருக்கு தான் பிடிக்காது இந்த மகாலக்ஷ்மிய..!" என்று புகழ...


கனிக்கு இப்பொழுதே தன் மாமியார் மீது பாசம் பெறுக, தன்னவனை நேசம் நிறைந்த விழிகளால் நோக்கியவள், 'அப்படியா' என்று கேட்க... அவனும் அவளை பார்த்து தலையசைத்து கண் சிமிட்டினான்.


அவனின் செயலில் வெட்கம் வந்து அவள் திரும்பிக்கொள்ள, பெற்றவர்கள் மனம் நிறைந்து போய் இருந்தனர். வசுந்தராவின் பேச்சைக் கேட்டு... அதுவும் ஒரு அன்னையாய் லக்ஷ்மி பூரித்து போனார்.


தோழிகள் தான் இங்க என்ன டா நடக்குது என்ற பீலிங்ல உட்கார்ந்து இருந்தார்கள். இவர்கள் இருவரும் கண்ணாலே பேசிக் கொள்வதை பார்த்து...


சந்தோஷ் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க... நம்ம ஹனி சந்தோஷை சைட் அடித்துக் கொண்டு இருந்தாள். அடுத்த ஜோடி இவங்களா இருக்குமோ..!


பெரியவர்கள் மற்ற விஷயங்களை பேசி விட்டு விடை பெற... "அப்புறம் சம்மந்தி நல்ல நாள் பார்த்துட்டு சொல்றேன் நிச்சயதார்த்தம் வைச்சுப்போம்." என்றவாறே வசுந்தரா எழுந்துக் கொள்ள...


கனி, துவா முகத்தை பார்க்க... இவன் அவள் முகத்தை பார்க்க... இருவருக்கும் பிரிய வேண்டுமே என்ற நிதர்சனம் புரிந்து கவலையுடன் நோக்க... சந்தோஷ் மற்றும் வசுந்தரா வெளியே செல்ல... இவனும் அவளிடம் தலை அசைத்து விட்டு சென்று விட்டான்.


அவன் வருவதற்கு முன்பு இருந்த மனநிலைக்கு எதிரான மனநிலையில் இருந்தாள் கனி. அவரின் போன் நம்பர் கூட வாங்கலையே என்று வருந்திக் கொண்டு இருக்க... இந்த கள்வன் அது எல்லாம் சிறப்பாக அவன் மச்சானை கரெக்ட் செய்து அவள் நம்பர் வாங்கி சென்று விட்டான்.


'அவர் நம்பரும் வாங்கல... அவர் தன் காதலையும் சொல்லலையே..!' தனக்குள்ளே கனி புலம்பிக் கொண்டு இருக்க...


அவனுக்கு பிரிவு துயர் இருந்தாலும் மன நிம்மதியாக பயணமானான்.


துவா ஏன் காதலை சொல்லவில்லை..?


பார்ப்போம் இனி வரும் அத்தியாயத்தில்...


தொடரும்...

அத்தியாயம் : 3


"என்ன லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப் ஆஹ்?? என்ன சொல்ற??" என்று அதிர்ந்து அனைவரும் கேட்க," ஆமாம் வீணாவோட என்கேஜ்மென்ட்ல எனக்கும் இவளுக்கும் விருப்பம் அப்படின்னு இரண்டு வருசத்துக்கு முன்னாடி சொன்னேன் அதுக்கு இவளும் தலையை ஆட்டினாள் அதுக்கு நீங்க எல்லோரும் சாட்சி..நாங்க தான் கனடால இருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே இந்த ரெண்டு வருஷத்துல ஒரு வருஷமா நாங்க ரெண்டு பேரும் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வரும் உங்க பாஷையில் சொல்லணும்னா கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கோம்" என்று பச்சையாக உண்மையை போட்டு உடைக்க அவன் இப்படி உடைப்பான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை அவள் முகம் கூற


இந்த செய்தி அவனது பெற்றோர்கள் முதல் அனைவருக்கும் அதிர்ச்சி தான் என்பதால் அதிர்ந்து நிற்க எதை செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தானோ அதை அவன் சிறப்பாக செய்ய அவனும் அவனுக்கு என்ன திமிர் இருந்தால் இதை சொல்லுவான் என்று அவளும் நின்று கொண்டிருந்தாள். அவன் கூறுவதில் ஒன்றும் மறுப்பேதும் இல்லை என்றாலும் அதை இவன் அவனுக்கு தகுந்தது போல திரித்துக் கூறுவது தான் அவளுக்கு கோபமே,


"அவன் சொல்றதெல்லாம் உண்மையா சொல்லு???" என்று நிதீஷ் கேட்க அவளோ மறுக்காமல் ,"ஆமாம் உண்மை தான் அதுதான் அவன் தெளிவா சொல்றானே" என்று சினேகா கடுப்போடு கூற ,


"இதை சொல்ல உனக்கு வெட்கமே இல்லையா???" என்று நிதிஷ் கேட்டான் ,"உன்னால எப்படி முடியுது என்னை கல்யாணம் செய்துகொள்ள சம்மதம்ன்னு சொல்ல உனக்கு எப்படி முடியுது??" என்று அவன் கேட்க அதை கேட்ட அவளும்," நீ எப்படி உன்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட் மாயா கிட்ட பேசிட்டு இருந்தியோ அது மாதிரிதான் இதுவும் ரொம்ப பேச வேண்டாம்னு நினைக்கிறேன் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயம்ன்னு பேசிட்டு இருக்காத அப்ப மட்டும் அது சரி இப்ப மட்டும் அதுக்கு பேரு வேறயா??" என்று நிதிஷ்யை பார்த்து ஸ்னேஹா கோபத்தோடு கேட்க, அதை கேட்டு ரியா அதிர்ந்தாள்.. சினேகா ஆரம்பத்தில் இருந்து இவன் என்ன செய்ய போகிறானோ என்று நிற்க அவள் எதிர்பார்க்காதது போல அவன் சொல்லவும் அவளுக்கே சற்று அதிர்ச்சிதான் அதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் இருக்கும் பொழுது இவன் வேறு இவ்வாறு கேட்கவும் அவன் என்ன தவறு செய்தான் என்பதையும் போட்டு உடைத்து விட்டாள் சினேகா....


அதைக்கேட்டதும் அமர் ரியாவை பார்த்து ,"என்ன இது?? இது தான் இவன் லட்சணமா??" என்பது போல பார்க்க அதே அதிர்ச்சி தான் அவளுக்கும் இருந்தது ஆனால் அமருக்கு இது தேவையில்லாத விஷயம் அவன் எப்படி இருந்தால் அவனுக்கு என்ன அவனுக்கு தேவை அவளுடைய இந்த கல்யாணம் சத்தியமாக நடக்கக்கூடாது அதுக்கு அச்சாரமான இந்த நிச்சயம் நடக்க கூடாது அவ்வளவே அதை சிறப்பாக செய்து இருக்க அதுமட்டுமே அவனது பிரதான குறிக்கோளாக இருக்க ரியாவின் பிரச்சனையை அவன் ஓரம் கட்டி விட்டான் அவன் பிரச்சனை செய்வதற்காகவே தேர்ந்தெடுத்த ஒரு தொடுப்பு தானே ரியா..


நிதிஷ் கொஞ்சம் அப்படித்தான் பெண்கள் விஷயத்தில் கடலை போடுவான் ஆனால் அது இவளுக்கு எப்படி தெரியும் என ரியா நினைக்க ஒருவேளை அவள் கூறுவது போல நிதிஷ் ஏதாவது பெண்ணிடம் தவறாக நடந்து இருப்பானோ அப்படி ஏதாவது மட்டும் நடந்து இருக்கட்டும் என்று இப்பவே கருவி கொண்டாள் ரியா.. அவள் இதை கூறியதும் தனது நல்லவன் இமேஜ் போய் விட்டதே என நிதிஷ் அதிர்ந்து தலையை குனிந்து கொண்டான் குனிந்து கொண்டிருக்கும் அவனை ஓங்கி கொட்ட வேண்டும் என்று ரியா எண்ணிக் கொண்டிருக்க இவனுக்காக அழுதேனே என்று எண்ணியவள் வேகமாக அமரின் கையைப் பிடித்து," அமர் போதும் இவனுக்காக அழுதேனே எனக்காக இங்கே நீங்க பிரச்சனை செய்யவேண்டாம் அமர் வாங்க போகலாம் "என்று ரியா கூற அதை பார்த்து நிதிஷ் குழப்பம் அடைய முக்கியமான கட்டத்தில் அனைவரின் பார்வையும் எதிர்கொண்டு இருக்கும்பொழுது இவள் வேறு இப்படி சொல்கிறாளே என எண்ணி அவர் அவளைப் பார்த்து," உனக்கு வேணும்னா அவன இழுத்துட்டு போ நான் இப்ப முக்கியமான கட்டத்தில் நிக்கிறேன் இனி பல கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டி இருக்கு நானே எப்படிடா மேடைக்கு வந்து பிரச்சனை பண்ணலாம்னு காத்திருக்கும் போது தான் நீயா வந்து சிக்கின உன்னுடைய வேலை அதோட முடிஞ்சு போச்சு இப்போ நீ கிளம்பிடு எங்கேயாவது உட்கார்ந்து அழு இல்லேன்னா அதோ அங்கே நிற்கிறானே மஞ்ச மாக்கான்னு அவனை இழுத்துட்டுப் போயி ரெண்டு பேர் உட்கார்ந்து பேன் பாருங்க" என்று கூறிவிட்டு முறைக்கும் தன் பெற்றோர்களை எதிர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அமர் .. அவர்கள் எதிர்பார்த்தது போல பிரச்சனை செய்து விட்டானே என விஸ்வநாதன் தன் மகனை பார்த்து முறைக்க அருகில் வேறு ஒருத்தி அவனை கண்களாலேயே அவனை பொசுக்கி கொண்டிருக்க ஒரு கண்ணால் அவளையும் மறு கண்ணால் தன் பெற்றோர்களையும் எதிர்கொண்டு கொண்டிருந்தான் அமர்..


ரியாவும் அவன் கூறியது போல நிதிஷ் அருகில் சென்றவள் அவனை பார்க்க குனிந்த தலையில் இருந்தவனை நறுக்கென்று கொட்டினாள் ரியா அவனோ தலையை தூக்கி பார்க்க கொட்டியது தோழியாக இருக்க," எதுக்குடி கொட்டின??" என்று கேட்க ,"உனக்கு என்னை எல்லாம் பார்த்தா பொண்ணு மாதிரி தெரியாதா கண்டவ பின்னாடி சுத்திட்டு இருக்க கிட்டத்தட்ட 23 வருஷமா உன் கூடவே இருக்கேன் என்னை பத்தி நினைச்சு கூட பார்க்க மாட்டியா இல்லை நான் பொண்ணுங்க கேட்டகிரி இல்லை என்று நீயே முடிவு பண்ணிட்டியா??? இதோ பாரு இப்ப சொல்றேன் ஐ லவ் யூ நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று ரியா கூற நிதீஷ் அதிர்ந்து அவளை பார்த்து," என்னடி சொல்ற நீயும் நானும் பிரண்ட்சாத்தானே பழகிட்டு இருந்தோம்" என்று கேட்க அதைக்கேட்ட அவளோ ,"நீயும் மாயாவும் தான் பிரண்ட்ஸ் ஆனால் அவ கிட்ட தப்பா நீ நடந்துக்கலையா இனி கண்டவ பின்னாடி சுத்து உன்னை கொலை பண்ண போறது நானாகத்தான் இருப்பேன் மரியாதையா இங்கிருந்து கிளம்பி என் கூட வர்ற அவ்வளவு தான் உனக்கு சொல்லிட்டேன் " என்று கூறி தரதரவென நிதிஷ்யை அனைவர் முன்னும் இழுத்து சென்றாள் ரியா அதைப்பார்த்து நிதீஷின் பெற்றோர்கள் அதிர்ந்தனர்..அவர்களும் இது என்ன என்பது போல இருக்க உறவினர்கள் அனைவரும் மெல்ல ஒதுங்க துவங்க முக்கியமான ஆட்களை தவிர வேறு யாரும் இங்கே இல்லை என்ற நிலையில்,


"சரி அவன் கேட்கக்கூடாது நான் கேட்கிறேன் உண்மையை சொல்லு இத்தனை பேரு முன்னாடி அவன் சொல்றான் அப்படினா பொய்யாக இருக்காதே சொல்லுடி சொல்லு" என்று ரேவதி கேட்க மகளோ அம்மாவை பார்த்து ,"ஆமாம் உண்மைதான் அதுக்கு என்ன இப்போ?? அதான் அவன் மைக்கில் ஊரே கேட்கிற அளவுக்கு சொல்லிட்டானே மறுபடியும் எதுக்கு வந்து என்கிட்ட கேட்டுட்டு இருக்க???" என்று கேட்டாள் ஸ்னேஹா அதை கேட்டதும் வெங்கடேஷ் வேகமாக ஓடிவந்து தன் இடுப்பில் சொருகி இருந்த பெல்ட்டை அவிழ்த்து அவளை அடிக்க வர தடுத்து நிறுத்தினான் அமர்..தந்தையின் பெல்ட்டை கண்டதும் இன்று என் கதை முடிந்தது என எண்ணினாள் ஸ்னேஹா..


"அங்கிள் எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே எதுக்காக அடிக்கிறீங்க??? இனி அடிச்சா மட்டும் நடந்ததெல்லாம் மாறிவிடுமா என்ன??? அப்படி அடிப்பதாக இருந்தால் என்னை அடிங்க " என்று கூறினான் அமர்..


அதை கேட்டதும் அவன் தடுத்து நிறுத்தி இருக்கிறானா என்பதை சரிபார்த்துக் கொண்டு,"செய்வதை எல்லாம் செய்துட்டு இங்கே வந்து நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்கியா எதுக்குடா தடுத்து நிறுத்தற அம்மா அப்பா அடிங்க என்னை" என்று சினேகா கூற


"இவ்வளவு நடந்திருக்கு என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னயாடி நான் ஏன் அவனை வேண்டாம்னு சொல்ற அப்படின்னு நான் அப்பா, அக்கா எத்தனை பேரு உங்கிட்ட கேட்டோம் நீ ஏதாவது சொன்னியா??? இப்போ இப்படி வந்து அசிங்கப்படுத்ததானா??? எல்லாரும் முன்பும் உங்க டாடியோட மானம் போச்சு "என்று ரேவதி கூற தன் கையை பிடித்து இருக்கும் அமரை பார்த்து," என்ன அமர் நான் உன்னை இப்படி நினைக்கவே இல்ல உனக்கு இவளை பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லி இருந்தா நாங்களே சந்தோஷமா கல்யாணம் செய்து வைத்திருப்போம் அதுக்காக இப்படி செய்யலாமா இது என்ன விளையாட்டு நினைச்சுட்டு இருக்கீங்களா ஒரு பங்க்ஷன்ல ரெண்டு பேரும் விரும்பறீங்க என்று சொன்னீங்க இப்போ வந்து பிடிக்கலைன்னு சொல்றீங்க சரி நாங்க ஒரு பையனை பார்த்து இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணினா அதுக்கும் வந்து தடையா நிக்கறீங்க இப்போ உனக்கு என்னதான் வேணும் அமர் எதற்காக இதையெல்லாம் செய்து இருக்க என்ன வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க உன்னை நம்பி என் மகளை அனுப்பின பாவத்துக்கு அவளை இப்படி செய்து வைத்திருக்க???" என்று வெங்கடேஷ் கூற


"என்ன உங்க பொண்ணை நான் எப்படி செய்தேன் உங்க மகள் விருப்பப்பட்டுதான் என்கூட இருந்தா அது எங்களுடைய பர்சனல் அதைப் பற்றி நான் இங்கே பேச வரல அதை பத்தி நீங்களும் கேட்காதீங்க இப்ப கூட அவளுக்கு விருப்பம் இருந்தா நிதிஷை கல்யாணம் செய்துக்கலாம் அதுக்கு நான் தடையும் சொல்லலை ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை நாங்க வாழ்ந்துட்டு இருந்தோம் அப்படின்னு ஒரு உண்மையை என் நண்பனுக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்கேன் அதனால தான் நான் சொல்றேன் " என்று கூற ,


அதைக்கேட்ட அவளுக்கு புசுபுசுவென கோபம் வந்தது ,"ஆமாம் பெரிய இவன் நண்பனுக்காக உண்மையை சொல்றானாம் பாவி" என்று அவள் வாய் விட்டே கூற அவனோ அதை கூறும்பொழுது ஓரக்கண்ணால் அவளைப் பார்த்து கண்ணடித்தான்..


வேகமாக வீணா அவளிடம் வந்து ,"அவன் சொல்றதெல்லாம் உண்மையா??? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா?? அதுனால தான் பிரிஞ்சிட்டிங்களா??? என்ன டி இதெல்லாம்??" என்று கேட்க ,"மை டியர் டார்லிங் வீணா அவளுக்கும் எனக்கும் சண்டை தான் அதனாலதான் நாங்க பிரேக்கப் ஆகிவிட்டோம் இப்போ அவள் யாரோ நான் யாரோ ஆனால் உண்மையை சொல்லணும்ல" என்று அழுத்தி அழுத்தி அவன் கூற ,


அதை கேட்டதும் அவள் முறைத்து ,"எதுக்காக வந்தாயோ அதை சிறப்பாக செய்திட்டில்லை பொறுக்கி" என்று கூறினாள் அவனோ அவளிடம் ,"இதைக்கூட நான் செய்யலைன்னா எப்படி மை டியர் ஸ்வீட் ஹார்ட் பேபி அப்படி உன்னை தனியா விட்டுட்டு இருப்பேன்னு மட்டும் நினைக்காதே நான் தனியா இருக்கேனா நீயும் தனியா இருந்துதான் ஆகணும் " என்று அழுத்தமாக கூற அதைக்கேட்ட அவளோ ,"உனக்கு என்னதான் வேணும் அதுதான் உனக்கும் எனக்கும் ஒத்துவராது என தனித்தனியாக பிரிஞ்சாச்சே இங்கே வந்து எதற்காக இப்படி பண்ணிட்டு இருக்க???" என்று அவள் கேட்க அவனும் அவளைப் பார்த்து," சிம்பிள் உன்னை இப்படி விட எனக்கு மனசு இல்ல அதுமட்டுமின்றி என்ன தைரியம் இருந்தா நீ என் முன்னாடியே வேறு ஒருத்தன் கூட இப்படி நிப்ப??" என்று கூறிவிட்டான்


அவன் எதற்காக வந்தாலும் அதை சிறப்பாக செய்து விட்ட திமிர் அவன் முகத்தில் இருக்க இங்கே இவள் தான் ஒரு பக்கம் அவள் அம்மா மற்றும் அவளது அக்கா ஒரு பக்கம் என அவளை காண்டாக்கி கொண்டிருக்க அவளது அப்பா அமரை பார்த்து," அமர் நீ வந்து அவளை பிடிச்சிருக்கு எனக்கு கல்யாணம் செய்து தாங்க அப்படின்னு என் கிட்ட கேட்டு இருந்தா நான் அவளுக்கே விருப்பமில்லை என்றாலும் உனக்கு கல்யாணம் செய்து வைத்து இருப்பேன் ஆனால் நீ இப்படி செய்திருக்க வேண்டாம்" என்று குறை கூறிக் கொண்டே இருக்க


"அங்கிள் எனக்கு சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன் எனக்கு பிடிச்சிருக்கு உங்க பொண்ணுக்கு தான் என்னை வேண்டாம் நான் என்ன செய்யறது ஏன் வேண்டாம்னு அவ கிட்ட கேளுங்க?? எனக்கு வேணும் என்றால் நான் உங்க கிட்டயே கேட்டிருப்பேன் இப்படி வந்து பப்ளிக்கா சொல்லியிருக்க மாட்டேன் ஆனால் என்னை வேண்டாம் அப்படின்னு சொன்னது உங்க மகள் அப்போ என்னை என்ன செய்யச் சொல்கிறீங்க எனக்கு ஒரு மனசாட்சி இருக்கு அதனால நான் உண்மையை சொல்லிட்டேன் இதுல தப்பு ஒன்னும் இல்லையே அதுமட்டுமில்லாமல் இப்போ எனக்கு அவள் வேண்டாம் அவளுக்கு எப்போ என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாலும் அப்போது இருந்து எனக்கும் வேண்டாம் ஆனால் விட்டகுறை தொட்டகுறை இருக்கக் கூடாது அப்படின்னு தான் உண்மையை நான் சொல்லிட்டேன்" என்று கூற அவன் கொஞ்சம் காரமாக வெங்கடேஷிடம் கூறவும் வெங்கடேஷ் தன் மகளிடம்,


"சொல்லுடி சொல்லு குடும்ப மானத்தை வாங்கிட்டு இங்கே வந்து நின்னுட்டு இருக்க எல்லாரும் பாரு இப்படி நம்மளை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க அப்படின்னு உன்னை எதற்காக நான் கனடா அனுப்பினேன் வேலை செய்யத் தானே என்ன வேலை செஞ்சு வச்சிருக்க?? அவனுக்கு தான் உன்னை பிடிச்சு இருக்குன்னு சொல்றானே அப்புறம் உனக்கு என்ன கேடு டி கருமம் அவன் கூட இருந்துட்டு அவனை எதுக்கு டி வேண்டாம்ன்னு சொல்ற???" என்று அவளது அம்மா கத்திக்கொண்டு இருக்க,


 எல்லாரும் கொடுத்த பிரஷரில் ஸ்னேஹாவிற்கு லேசாக மயக்கம் வருவதுபோல அவளுக்கு தோன்றியது லேசாக தலை சுற்ற வேகமாக வீணாவின் கையை பிடித்துக் கொண்டாள் சினேகா அவளது தலை சுற்றவும் எல்லோரும் அதிர்ந்து ,"என்னாச்சு என்னாச்சு" என்று கேட்கவும் சினேகா அவளுக்கு எல்லாம் விளங்கி போனது அவள் எதற்காக பயந்து கொண்டிருந்தாலோ அதற்கு தகுந்தது போல அவளுக்கு மயக்கம் வரவும் தன் அக்காவின் கையை பிடித்துக் கொண்டு," எனக்கு என்னமோ போல இருக்கு" என்று அப்படியே சரிய இந்த முறை அதிர்வது அமர்..


 அவளுக்கு என்ன ஆயிற்றோ என அவன் நினைத்து வேகமாக அவள் அருகே வந்து ,"என்ன ஆச்சு??" என்று கேட்க அவள் அவனை பார்த்து முறைத்து ,"உனக்கு தேவையானதை நீ செஞ்சுட்டில உன் வேலை என்னமோ அதை பார் எனக்கு என்ன ஆனால் உனக்கு என்ன டா??" என்று அந்த நிலையிலும் அவனை எதிர்த்து பேசியவள் வீணாவின் காதில் ,"எனக்கு பீரியட்ஸ் தள்ளி இருக்கு காலையில் இருந்து வாமிட்டாவே இருக்கு ஐ தின்க் அம் பிரக்னன்ட்" என்று கூறினாள் அதைக் கேட்ட வீணா அதிர வீணா ஒரு டாக்டர் அவளுக்கு இதை கூறியதும் ஏதோ எங்கோ இடிப்பது போல இருக்க வேகமாக தன் தாயிடம் ஏதோ கூற அவரையும் தன் தங்கையோடு அழைத்து சென்றாள் அருகே என்ன நடக்கிறது என்று புரியாமல் முழிக்கும் புது மாப்பிளை ராகேஷை கண்டு கொள்ளாமல் வீணா செல்ல


சிவ சிதம்பரத்திற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை அவரது மனைவியோ ,"என்னங்க இதெல்லாம்" என்று கேட்கவும் வீணாவுக்கு தான் கொஞ்சம் அசிங்கமாக போய்விட்டது இருந்தாலும் தன் தங்கையை அழைத்து சென்றவள் போனது என்னவோ அவளுடைய கிளினிக்கிற்கு தான் ..


 இந்த ரிசார்ட்டின் அருகே தான் கிளினிக் இருக்க அங்கே சென்றவள் தன் தங்கையை பரிசோதித்து பார்க்க தங்கை கூறியது உண்மைதான் அவள் நாற்பது நாள் கருவை சுமந்து இருக்கிறாள் இங்கே இவளுக்கு என்ன ஆயிற்றோ என பதறிக் கொண்டு வேகமாக பின்னாலேயே சென்ற மற்ற குடும்பத்தினரும் கிளினிக்கிற்கு செல்ல அங்கே வீணா கையை கட்டிக்கொண்டு தன் தங்கையை பார்த்து முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க அவளது தங்கையோ எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.... அவள் எதிர்பார்த்தது தான் அதனால் அவளுக்கு பெரிதாக அதிர்ச்சி எல்லாம் அவளுக்கு இல்லை ..ஆனால் வீணாவுக்கு தான் மலைப்பாக இருந்தது..


" சொல்லுடி இதுக்கு காரணம் அமர் தானே??" என்று அவள் கேட்க ,அதை கேட்ட ஸ்னேஹா கடுப்போடு,"அவன் கூட இருந்தா அவன் காரணமில்லாமல் உன் புருஷனா காரணமா இருப்பான்???" என்று கேட்டாள் ஸ்னேஹா

அத்தியாயம் -6


கனி அவன் நினைவில் இருக்க...


இங்கு துவா என்ன செய்கிறான் என்று பார்ப்போம்...


அவளை சந்தித்த நாளில் இருந்து இன்று வரை துவா அவள் நினைவில் தான் இருக்கிறான். அவ்வப்பொழுது அவளின் ஹிப் செயின் எடுத்து ரசித்து கொண்டே இருப்பான். அவளின் இடை தழுவிய பாக்கியம் பெற்ற செயின் என்பதே ஸ்பெஷல் தானே...


"உனக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு எப்ப கிடைக்குமோ..? திரும்ப எப்ப அவளை பார்ப்பேனோ..?" அந்த செயினை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தான்.


தன் தாயிடம் சொல்ல பல முறை முயன்று தோல்வியை தழுவினான். சந்தோஷிடம் சொல்ல சொன்னால் அவனும் சொல்ல தயங்கி கொண்டே இருக்க... இவர்கள் இருவரின் தயக்கம் எங்கு போய் முடியுமோ..?


சற்று மந்தமாகவே அலுவலகம் வந்தவன், தன் வேலைகளை பார்த்து கொண்டு இருக்க.. அவன் கேபின் கதவை தட்டி விட்டு அனுமதி பெற்று உள்ளே வந்தான் சந்தோஷ்.


இவனின் முகம் பார்த்து விட்டு, "என்னாச்சு சார்..? ஒரு மாதிரி இருக்கீங்க எதுவும் உடல்நிலை சரி இல்லையா..? என்ன செய்யுது..?"


துவா, "உடம்பு எல்லாம் நல்லா தான் டா இருக்கு மனசு தான் சரி இல்ல. அவ ஞாபகமாவே இருக்கு. அம்மா கிட்ட சொல்லவும் முடியல என்ன பண்றது என்றே தெரியல. அவ இல்லாம இதுக்கு மேல இருக்க முடியும் என்று தோணல. இப்போவே கிட்டத்தட்ட அவளை பார்த்து ஒரு மாசம் ஆக போகுது. இன்னைக்கு ஈவினிங் அம்மா கிட்ட பேசிடலாம்ன்னு தோணுது டா" யோசனையுடனே கூறினான்.


இப்பொழுது அலுவலகம் நேரம் என்பதால் சந்தோஷ் ஒன்றும் கூறாமல், "சரி சார் ஈவினிங் பேசுவோம். இதுல சைன் பண்ணுங்க" என்று வேலையை முடித்து விட்டு துவாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே சிந்தித்துக் கொண்டே சென்றான்.


******************


கோயம்புத்தூர் கனியின் வீட்டில்...


லக்ஷ்மி, "அம்மாடி கனி வா மா நகை கடை வரை போயிட்டு வருவோம் " என்று மகளை அழைத்தார்.


கனி, "என்ன மா தீடிர்னு நகை கடைக்கு கூப்பிடறீங்க என்ன வாங்க போறோம்..?"


லக்ஷ்மி, "சீட்டு போட்டு இருந்தோம்ல டா அது முடிந்து விட்டது. அதான் உனக்கு ஏதாவது நகை எடுப்போம் என்று நினைத்தேன்."


கனி, "சரி மா கிளம்புவோம்"


இருவரும் இணைந்து நகை கடைக்கு சென்ற பிறகு...


லக்ஷ்மி அட்டிகை ஒவ்வொரு டிசைன் ஆக எடுத்து பார்த்து கொண்டு இருக்க, கனி அப்படியே கடையை சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள். அவளின் கால்கள் அவளையும் மீறி பிரேஸ்லெட் இருக்கும் இடத்திற்கு செல்ல...


அங்கு சென்று ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்க... துவா கையில் இருந்து இவளிடம் வந்த அந்த பிரேஸ்லெட் மாதிரியே ஒன்று அங்கு இருக்க, இவளின் நினைவு கேள்வியே இல்லாமல் அவனிடம் சென்று விட்டது. அவன் நினைவில் இவள் சுத்தி நடப்பது தெரியாமல் நிற்க...


அங்கு டிசைன் பார்த்து இவளிடம் பேசி கொண்டு இருந்த லக்ஷ்மி, அவரின் கேள்விக்கு பதில் இல்லாததால் இவளை தேட... இவள் இங்கு நிற்பதை கண்டு இங்கு வந்து அவளை கூப்பிட, அவள் தான் சுயநினைவில் இல்லையே..! அவளை போட்டு உலுக்கிய பிறகு தான் நிகழ் உலகுக்கு வந்தாள்.


"ஹான்..! என்ன மா..?"


"என்ன... என்ன மா, இங்க என்ன பண்ணிட்டு இருக்க..? அம்மா எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். என்ன யோசனையில் இருக்க டா."


"அது ஒன்னும் இல்லை மா " தாயிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.


லக்ஷ்மி அவளை கூர்ந்து பார்க்க, 'மகளிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே..? என்ன னு கவனிக்கணும்'

என்று மனதில் நினைத்து கொண்டே...


"வா மா வந்து செலக்ட் பண்ணு " என்று அழைத்து சென்றார்.


நகை வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்றவர்கள், அவரவர் வேலையை கவனிக்க சென்று விட, லக்ஷ்மி மகள் மீது ஒரு கண்ணை வைத்து இருந்தார். தொடர்ந்து மகளை அவளுக்கே தெரியாமல் கண்காணிக்க பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.



தன் அறைக்கு சென்றவள், 'ச்சே இன்னைக்கு நகை கடையில் இப்படி நடந்து கொண்டோமே..! அம்மா எதுவும் கண்டு பிடிச்சி இருப்பாங்களா..? கொஞ்சம் பயமா தான் இருக்கு. என்ன பண்றது..? அம்மா கண்டு கொண்டார்களா..? இல்லையா..? எப்படி தெரிந்து கொள்வது..?' மனதிற்குள்ளே ஒரு பட்டிமன்றமே நடத்தி கொண்டு இருந்தாள்.


இங்கு சமையலறை சென்ற லக்ஷ்மி, "அவ சரியா இருக்க மாதிரி தான் இருக்கு. அப்போ ஏதோ நினைவில் இருந்து இருப்பா போல பெருசா ஒன்னும் இருக்காது. நம்ம பொண்ணை நாமளே நம்பலைனா எப்படி நான் ஒரு மடச்சி." தன்னை தானே கடிந்து கொண்டார்.


தன்னுடைய மகள் கேடி என்று தெரியாமல்... தெரிய வருமா..? தெரிய வந்தால் லக்ஷ்மியின் எண்ணம் எவ்வாறு இருக்கும்..?


**************


அலுவலகம் முடிந்த பிறகு மாலை கிளம்பும் வேளையில், சந்தோஷ் துவா அறைக்கு வந்தான்.


சந்தோஷ், "என்ன டா மச்சான்..? காலைல அந்த புலம்பு புலம்புன தங்கச்சி உன்னையே புலம்ப விட்ருச்சா..?" என்று லேசாக நக்கலடித்துக் கொண்டே கேட்டான்.


துவா, "என்னோட பொழப்பு உனக்கு நக்கலா தெரியுதா..?"


சந்தோஷ், "சரி சரி ஜோக்ஸ் அபார்ட், இப்போ என்ன செய்ய முடிவு பண்ணி இருக்க."


"அதான் டா இன்னைக்கு அம்மா கிட்ட பேசலாம்ன்னு இருக்கேன் நீயும் வரியா கொஞ்சம் எனக்கும் தைரியமா இருக்கும்."


"சரி டா கிளம்பு போகலாம் "


இருவரும் கிளம்பி வெளியே வர சந்தோஷ் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக் கொண்டு இருக்க... துவா அவன் அருகே அமர்ந்து பேசி கொண்டே வந்தான்.


இருவரும் பேசிக் கொண்டே வர வழியில் தீடீரென ஒரு குழந்தை குறுக்கே ஓடி வந்தது. நல்ல வேளையாக சந்தோஷ் சரியான சமயத்தில் கவனித்து காரை நிறுத்தி விட்டான்.


காரை நிறுத்தி இருவரும் வேகமாக ஓடி வந்து, துவா அந்த குழந்தையை தன் கையில் தூக்கி கொண்டான்.

விழுந்த அதிர்ச்சியில் குழந்தை அழுது கொண்டே இருக்க... அதன் தாய் வேகமாக ஓடி வந்து குழந்தையை வாங்கி சமாதானப்படுத்த ஆரம்பித்தாள்.


"ஒன்னும் இல்ல டா சினி மா இங்க பாரு. அம்மா டா பாப்பாக்கு ஒன்னும் இல்ல"


அந்த குழந்தையின் தாயை பார்த்த இருவரும் ஏதோ யோசனையில் இருக்க... துவா சரியாக யூகித்து, "நீங்க நிவேதா தானே" என்று கேட்டான்.


அது வரை யோசனையில் இருந்த சந்தோஷ், "ஆமா டா இது நம்ம கூட படிச்ச நிவி தான். "


குழந்தையை சமாதானப்படுத்தி கொண்டு இருந்த அந்த பெண், இவர்கள் இருவரையும் இப்பொழுது தான் சரியாக கவனித்தாள். குழந்தைக்கு என்னவானதோ என்ற பதட்டத்தில் முதலில் இவர்களை கவனிக்கவில்லை.


"ஹேய்..! துவா, சந்தோஷ் எப்படி இருக்கீங்க ஆமா நான் நிவேதா தான்" சந்தோசமாகவே கூறினாள்.


(இவர்கள் இருவரும் பார்த்த அந்த பெண் நிவேதா... இவர்களுடன் கல்லூரியில் படித்தவள். படிக்கும் காலத்தில் நிவிக்கு துவா மீது ஈர்ப்புடன் கூடிய காதல் இருந்தது. அதை அவனிடம் சொல்லவும் செய்தாள். ஆனால் அவன் தான் மறுத்து விட்டான். உன்னை வெறும் தோழியாக மட்டுமே பார்க்க முடிகிறது என் மனதுக்கு மனைவியாக ஏற்க முடியவில்லை என்று கூறி விட்டான். அவளும் வருத்தத்துடனே இருந்து விட்டு சில வருடம் கழித்து வீட்டில் பார்த்த வரனை திருமணம் செய்து கொண்டாள்). இனி அவர்களின் தற்போதைய நிகழ்வுக்கு வருவோம்...


துவா, "நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க..? உனக்கு திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டதா சொன்னாங்க எப்படி இருக்க..? எப்ப வந்த..?"


நிவேதா, " நல்லா இருக்கேன் பா. வீட்ல ஒரு விஷேஷம் அவங்களுக்கும் லீவு கிடைச்சுது. அதான் வந்தோம்."


சந்தோஷ், "சரி சரி ரோட்டுல வைச்சு பேசிட்டு இருக்க வேண்டாம். பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு வாங்க அங்க போவோம். நிவி உன் கூட வேற யாரும் வந்து இருக்காங்களா..? "


நிவேதா, "இல்ல சந்தோஷ், நானும் பாப்பாவும் தான் வந்தோம். வாங்க போகலாம்" என்று கூறி காரில் ஏறி கொண்டாள்.


சந்தோஷ் கார் ஓட்டி கொண்டு இருக்க, துவா, இவள் புறம் திரும்பி, "அப்புறம் உன்னோட அவர் பேர் என்ன..? பாப்பா பேர் என்ன..? நீ எப்படி இருக்க உன்னோட லைப் எப்படி போகுது."


நிவேதா, "அவங்க பெயர் நந்தன். ஐ. டி. ல ஒர்க் பண்றாங்க. பாப்பா பேர் ஹாசினி." என்று கூறி கொண்டு இருக்கும் போதே காபி ஷாப் வந்து விட சந்தோஷ் இறங்கி உள்ளே போய் பேசலாம் என்று அழைத்து சென்றான்.


உள்ளே சென்று ஆளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்தவன், "மீதியை சொல்லு நிவி. உன்னோட கல்யாணத்துக்கு கூட எங்களை கூப்பிடல நம்ம கிளாஸ் பசங்க சொல்லி தான் தெரியும்." என்று கேட்டான் துவா.


நிவேதா, உன்னை விரும்பிட்டு உன்னையே எப்படி டா என்னோட கல்யாணத்துக்கு கூப்பிட முடியும். அதான் கூப்பிடல, அப்போ கொஞ்சம் பீலிங் இருந்தது. போக போக சரி ஆகிடுச்சு. சரி அதை விடு உன்னோட மனசு சொல்ற பொண்ணை பார்த்துட்டியா..? உன்னோட காதல் என்னாச்சு..?" என்று கேட்டாள்.


துவா சிறிது வெட்கத்துடனே, "இப்போ தான் ஒரு மாதம் முன்பு தான் அவளை பார்த்தேன். விரும்பவும் ஆரம்பித்து விட்டேன். இன்னும் அவளிடம் சொல்லவில்லை. இன்னைக்கு தான் அம்மாவிடம் சொல்லலாம் என்று இருக்கிறேன். பிறகு என்ன கல்யாணம் தான் என் கல்யாணத்துக்கு அவசியம் நீ வரணும்"


"கண்டிப்பா பா நான் இன்னும் ரெண்டு மாதம் இங்க தான் இருப்பேன். அதற்குள் திருமணத்தை வைத்து விட்டால் அவசியம் வரேன்." என்றாள்.


சந்தோஷ், "அது எல்லாம் இருக்கட்டும். குழந்தையை இப்படித்தான் ரோட்டில் அஜாக்கிரதையா விடுவியா..? நான் பார்த்ததால் ஒன்னும் ஆகல. பார்க்காமல் போய் இருந்தால் என்ன ஆகி இருக்கும். உனக்கு பொறுப்பே இல்ல நிவி." என்று காட்டமாக கேட்டான்.


"இல்ல டா, என் கை பிடிச்சுட்டு தான் வந்தா. தீடிர்னு கையை விட்டுட்டு ஓடி வந்துட்டாள். இனிமேல் கவனமாக இருப்பேன். " வருத்தத்துடனே கூறினாள்.


"சரி சரி விடுங்க ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்து இருக்கோம். நல்லதா ஏதாவது பேசுவோம்." என்று கூறினாள் நிவேதா.


அதன்பின் அவர்களின் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசிவிட்டு, நிவேதா திருமண வாழ்க்கை எப்படி போகிறது என்று விசாரித்து... அவளிடம் இருந்து அவளின் போன் நம்பர் பெற்று கொண்டு, இவர்களின் நம்பர் பெற்று கொண்டு... அவளை அவள் வீட்டில் விட்டு சென்றனர்.


நிவேதாவை பார்த்த மகிழ்ச்சியும் தன் அம்மாவிடம் கனியை பற்றி கூற வேண்டும் என்றும் நினைத்து கொண்டு துவா வர...


அவனின் தாய் அவனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்து இருந்தார் வீட்டில்...


என்னவா இருக்கும்..?


தொடரும்...

அத்தியாயம் -5


கனிக்கு அவன் மீது இருப்பது காதல் என்று புரியாமல் அவன் நினைவாகவே இருந்தாள். அவ்வப்போது அனிதா மட்டும் அவனை பற்றி பேசி இவளுக்கு அவனின் ஞாபகம் வரும்... ஆனாலும் மறக்க நினைப்பாள், முடியவில்லை...


காதல் என்பது அழகிய உணர்வு... எவ்வளவு தான் அழுத்தினாலும் வெளியே வந்து தான் ஆகும். பார்ப்போம் இவளுக்கு எப்படி வருகிறது என்று...


இவ்வாறாக அவரவர் நினைவில் சில நாட்கள் கழிய... ஒரு நாள் அனிதா போன் செய்து வெளியே போகலாம் என்று அனைவரையும் அழைக்க... தோழிகள் பெரிய மாலுக்கு சென்றனர்.


அனைவரும் அப்படியே அங்கு வலம் வர, கனி முகத்தில் வழமையான சிரிப்பு இல்லை. வாணி தான் முதலில் கவனித்தாள்.


'என்னவா இருக்கும்..? இவ ஏன் இவ்வளவு சோகமா இருக்கா..?' என்று மனதில் நினைத்துக் கொண்டு, "சரி வாங்க ரொம்ப நேரம் சுத்திட்டோம் கொஞ்சம் உட்காருவோம்... ஏதாவது சாப்பிடுவோம் " என்றாள்.


அனிதா, "சூப்பர் டி வாணி இப்போ தான் பசிக்குதே..! என்ன பண்ணலாம்னு நினைச்சேன் நீ சொல்லிட்ட... வாங்க டி போய் சாப்பிடுவோம்"


அனைவரும் ஃபுட் கோர்ட் சென்று அமர்ந்து யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்க கனி ஏதோ நினைவில் இருக்க... ரம்யா அவளை போட்டு உலுக்கினாள்.


"என்ன டி, ஆச்சு உனக்கு..? கூப்பிட கூப்பிட அப்படியே உட்கார்ந்து இருக்க." - ரம்யா...


"ஹான், ஒன்னும் இல்ல டி, ஏதோ யோசனை சொல்லு டி என்னாச்சு..?


அனிதா, "என்னது..! என்னாச்சா..? சாப்பிட என்ன வேணும்னு எல்லாரும் கரடியா கத்திட்டு இருக்கோம். நீ ஒன்னும் சொல்லாம இருக்கியே."


அவன் நினைவில், "எனக்கு குலாப் ஜாமுன் வேணும் டி" என்றாள் ஒரு மந்தாகாச புன்னகையோடு...


வாணி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டே, "குலாப் ஜாமுன் தானே சொல்லிடுவோம்." என்றாள்.


அனிதா, "ஏண்டி அதை ஒரு மார்க்கமா சொல்ற..?"


வாணி, "நீ அவளை நல்லா கவனி அவ கிட்ட ஏதோ மாற்றம் தெரியுது நம்ம கூட தான் இருக்கா. ஆனால் அவ நினைவு இங்க இருக்க மாதிரி தெரியல. என்னனு விசாரிக்கணும் டி " என்று கனிக்கு கேட்காதவாறு மெதுவாக கூறினாள்.


அனிதா, "அப்படியா டி சொல்ற..? எனக்கு தான் தெரியல போல..."


வாணி, "உனக்கு ஹீரோவை எல்லாம் சைட் அடிக்க தான் நேரம் சரியா இருக்கு. அதுவும் இந்த டோவினோ போட்டோ பார்த்தால் கூட வாய பொளந்துட்டு போய்டுற. அவளை எல்லாம் கவனிக்க உனக்கு நேரம் இல்ல."


அனிதா, "என்ன டி என்ன மட்டும் குறை சொல்ற. நீயும் தான் அவனோட தீவிர விசிறி அவன் போட்டோ தான் உன் ரூம்ல கூட அவ்வளவு ஒட்டி வைச்சு இருக்க."


வாணி, "ஆமா ஆமா நானும் தான் வைச்சு இருக்கேன் அதுக்குனு பப்ளிக்ல கூடவா ஜொள்ளு ஊத்துவாங்க நாசுக்கா நடந்துக்கணும் டி, சரி அதை அப்புறம் பார்ப்போம் முதலில் இவளை என்னனு பார்ப்போம். இங்க வைச்சு பேச முடியாது. உன் வீட்ல அம்மா அப்பா இருப்பாங்க. ரம்யா வீட்லயும் தான். எங்க அம்மா இன்னைக்கு வெளியே போறேன் சொன்னாங்க இவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் பேசுவோம்" என்றாள்.


"சரி சரி "


ரம்யா, "என்ன டி உங்களுக்குள்ள பேசிட்டு இருக்கீங்க எனக்கும் சொல்லலாம் ல."


அனிதா, "ஒன்னும் இல்ல டி நம்ம ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டு வாணி நம்மள அவ வீட்டுக்கு கூப்பிட்றா அவ்வளவு தான்."


"ஓகே ஓகே முதலில் சாப்பிடுவோம்"


அனைவருக்கும் பிடித்த பானி பூரி உண்டு விட்டு... அப்படியே இன்னும் கொஞ்சம் நேரம் சுத்தி விட்டு, வாணி வீட்டுக்கு சென்றனர்.


இவர்கள் வாணி வீட்டுக்கு செல்லும் போது, வாணியின் தாய் வெளியே கிளம்பி கொண்டு இருந்தார்.


"வந்துட்டியா மா, நான் கிளம்பும் முன்னாடி வந்துட்டா நல்லா இருக்கும்னு பார்த்தேன் வந்துட்ட..." வாணியிடம் கூறி கொண்டே மற்றவர்களை பார்த்து, "வாங்க டா எல்லாரும்... எப்படி இருக்கீங்க..? வந்து ரொம்ப நாள் ஆச்சே..? "


"சரி சரி நான் கிளம்புறேன், நீங்க பேசிட்டு இருங்க. வாணி ஸ்நாக்ஸ் எதுவும் வேணுமுன்னா சாப்பிடுங்க எதுவும் குடிப்பது என்றாலும் குடிங்க. அம்மா கிளம்புறேன். "


"சரிங்க மா, நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்." அவரிடம் கூறி விட்டு தோழிகளை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள்.


அங்கு சென்ற உடனே... அனிதா, டோவி போட்டோ பார்த்து, "மாம்ஸ் எவ்வளவு அழகு பாரேன்..!" வழக்கம் போல் தன் ஜொள்ளு வேலையை ஆரம்பித்தாள்.


ரம்யா அவள் முதுகில் ரெண்டு போட்டு, "பொழுதுக்கும் உனக்கு இதே வேலையா போச்சு எப்ப பாரு மாம்ஸ் மாம்ஸ் னு கொஞ்சிகிட்டு... வா வந்து இங்க உட்காரு."


வாணியின் முகம் யோசனையில் இருப்பதை பார்த்து, "என்னாச்சு வாணி..? என்ன தான் யோசனை எங்களுக்கும் சொல்லலாம் ல " என்றாள் ரம்யா.


வாணி, "சொல்றேன் டி எல்லாம் நம்ம கனி பற்றிய யோசனை தான். " கனி புறம் திரும்பி...


"சொல்லு கனி, உனக்கு என்னாச்சு நீ முன்னாடி மாதிரி இல்ல. உன்னோட மனசு இங்க இல்லாத மாதிரி இருக்கு பேருக்கும் சிரிக்குற பேசுற ஆனா நீ நீயாவே இல்ல. " என்று சற்று ஆதங்கமாக கேட்டாள்.


ரம்யா, "என்ன டி சொல்ற..?"


"ஆமா டி, இவ மால் என்கிட்ட இதை பத்தி தான் பேசிட்டு இருந்தா. எனக்கும் ஒன்னும் புரியல. "


"சொல்லு கனி, அமைதியா இருந்தால் என்ன அர்த்தம் "


கனி தயங்கி கொண்டே, "எனக்கும் தெரியல டி, ஆனால் நீ சொல்வது உண்மை தான். நான் நானாகவே இல்ல. எனக்குள்ள ஏதோ புகுந்த மாதிரி அவர் எனக்குள்ள புகுந்து ஆட்டுவிக்கிறார். இது என்ன மாதிரியான உணர்வு என்றே தெரியல. அவர் நினைவாகவே இருக்கு டி." என்று சற்று சோகமாகவே கூறினாள்.


அனிதா, "அந்த அவர் எவரு டி "


கனி சற்று வெட்கத்துடனே, "அவர் தான் டி மண்டபத்தில் சந்திச்சேனே."


அனிதா, "என்னது மாம்ஸ் ஆஹ்..?"


ரம்யா சற்று கோபத்துடனே, "சும்மா இருந்து தொலை டி எப்ப பாரு மாம்ஸ் மாம்ஸ் என்று சொல்லிக்கிட்டு உனக்கு இதே வேலையா போச்சு. கொஞ்சம் வாய அடக்கு ஹனி, உன்னோட விளையாட்டு விபரீதம் ஆகலாம். " என்று எச்சரித்தாள்.


வாணி, "விடு டி, அவளை பத்தி தான் நமக்கு தெரியுமே..! அவ ஜஸ்ட் மனசில் இருப்பதை நம்ம கிட்ட சொல்லுவாள் அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல."


அனிதா, "நல்லா சொல்லு டி, எப்ப பாரு அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்கா. இவ இங்க இருந்து உயிரை வாங்குவா. இந்த சுரே அங்க இருந்து உயிரை வாங்குவா அட்வைஸ் பண்றேன்னு" என்று புலம்பினாள்.


வாணி, "சரி சரி இந்த விஷயத்தை அப்புறம் பார்ப்போம் முதலில் நம்ம கனி விஷயத்தை என்ன னு கேட்போம். என்ன கனி அவர் யார் என்னனே தெரியாது முகத்தை கூட நீ பார்க்கல. இது எல்லாம் சரி வரும் என்று நினைக்குறியா..?"


கனி, "அவர் நினைவாகவே இருக்கு என்று தானே டி சொன்னேன் இதுல சரி வருவதற்கு என்ன இருக்கு..?" என்று குழப்பத்துடனே கேட்டாள்.


ரம்யா, "அடியே மக்கு, உனக்கு இன்னுமா புரியல நீ சொல்வது எல்லாம் பார்க்கும் போது நீ அவரை விரும்ப ஆரம்பிச்சுட்ட. அதான் வாணி கேக்குறா. நான் சொல்றது கரெக்ட் தானே டி" அவளிடம் பேசி கொண்டே வாணியிடம் கேட்டாள்.


வாணி தலை அசைத்து கொண்டே, "கரெக்ட் தான் டி ரமி "


"ஹனி, சுரேகா க்கு மெசேஜ் பண்ணு இப்போ பேச முடியுமா னு கேட்டு... அவளும் நம்ம கூட இருந்தால் தான் சரி வரும்."


"ஓகே டி " என்றவாறே அவளுக்கு மெசேஜ் செய்ய... அவள் ஆன்லைன் ல இருந்ததால் உடனே வீடியோ காலில் அழைத்து விட்டாள்.


"ஹாய் டி, சொல்லு. என்ன ஹனி, நீ வாணி வீட்ல இருக்கியா..?" என்று கேட்டவாறே அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தாள்.


"என்ன ஆச்சு..? எல்லாரும் ஏதோ யோசனையில் இருப்பது போல இருக்கு..? எதுவும் பிரச்சனையா..?"


ரம்யா, "அப்படியும் சொல்லலாம் டி இந்த கனி..." என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறினாள்.


பொறுமையாக கேட்ட சுரேகா, "என்ன கனி என்ன இது எல்லாம்..? முகம் தெரியாத ஒரு ஆளை விரும்புறியா..? இது என்ன சினிமாவா..? கதையா..? யதார்த்த வாழ்க்கையில் இது எல்லாம் நடக்குமா..? இது எல்லாம் சரி வராது. முளையிலே கிள்ளி எறிவது தான் சரி. இது எல்லாம் மறந்துட்டு அடுத்த வேலைய பாரு" என்று சற்று கோபமாகவே கூறினாள்.


அனிதா," இதோ ஆரம்பிச்சுட்டா கிழவி மாதிரி அட்வைஸ் பண்ண இவளுக்கு சுரேகா ன்னு பேர் வைச்சு இருக்க கூடாது. ரூல்ஸ் ரேகா என்று வைச்சா தான் சரியா இருக்கும். " என்று முணுமுணுத்தாள்.


சுரேகா, "அங்க என்ன டி முணுமுணுக்குற..? எதுவா இருந்தாலும் சத்தமாவே சொல்லு. "


"ஒன்னும் இல்ல டி ஒண்ணுமே இல்ல."


"அது..! வாய வைச்சுட்டு பேசாம இருக்கணும். சொல்லு கனி என்ன முடிவு எடுக்க போற..?"


கனி, "சரி சுரே, மறக்க முயற்சி பண்றேன்" என்று சோர்வாகவே சொன்னாள்.


ரம்யா, "என்ன டி, குரல் உள்ள போகுது. ஒழுங்கா அவ சொன்ன மாதிரி செய்ய பாரு. தேவை இல்லாத வேலை எல்லாம் செய்யாத சரியா..? கண்டிப்புடனே கூறினாள்.


"ம் " என்று தலையை மட்டும் ஆட்டினாள் கனி.


மற்றவர்கள் சுரேகாவிடம் அவள் நலன் மற்றும் அவளின் குடும்பம் பற்றி கேட்டு கொண்டு இருக்க... அவளும் சொல்லி விட்டு இவர்களை பற்றி விசாரித்து கொண்டு இருக்க...


நம் கனி வேறு உலகில் இருந்தாள்.


தோழிகள் சொன்னதை ஏற்பாளா..? மறந்து விடுவாளா..?


தொடரும்...

காதலே.. என் காதலே.. பாகம் 2

1

குழந்தையை பலி கொடுக்க போகிறார்கள் என்றதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றருக்க வம்சியோ தனது பங்காரு பேபியை வாரி அணைத்துக்கொண்டான். வருகிற ஆபத்திலிருந்து காக்கும் அரணை போல.


"உனக்கு எதுவும் ஆகாது பேபி நான் இருக்கிற வரைக்கும். உனக்கு எதுக்கும் ஆக விடமாட்டேன். எதுவாயிருந்தாலும் என்னை தாண்டி தான் உன்னை நெருங்க முடியும். இந்த அப்பா இருக்குற வரை என் பேபி சேஃப் ஆ இருப்பாங்க" என்று அவனை அறியாமலேயே அப்பா என்ற வார்த்தை வந்து விட்டது. அதுகேட்டு இன்னும் அதிர்ச்சியோடு மொத்த குடும்பமும் அப்படியே ஸ்லோமோஷனில் அவனை திரும்பி பார்த்தது. என்னது அப்பாவா?! அப்பாவா?! என்னடா இவங்க ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஃபிலிம் மாறி மாறி ஓட்டுகிறார்கள். 



ஆனால் துளசிக்கு அந்த அப்பா என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மனது வலித்தது. கண்களை இறுக்க மூடி அந்த வலியை குறைக்க முயன்று தோற்றாள். கண்களில் மீண்டும் அருவியென கண்ணீர் வழிந்தோடியது.



"அப்பா.. என் குழந்தையின் அப்பா!!" என்று அவளது வாய் திரும்பத்திரும்ப முணுமுணுக்க.. மனது ரணமாக இருக்க..

மீண்டும் ஒரு பூமி ப்ரளயம் வராதா? வந்து என்னை அப்படியே விழுங்கி விடாதா? சீதையைப் போல? என்று நினைத்து கண்ணீர் வடித்தாள் துளசி.


குழந்தையை பலியிட போகிறார்கள் என்று நினைத்துதான் அவள் கலங்குகிறாள் என்று நினைத்த மஞ்சரி அவளருகில் அமர்ந்து "அப்படி எல்லாம் எதுவும் நடக்காது துளசி. நாங்கல்லாம் இருக்கோம் தானே.. கண்டிப்பா நாங்க பார்த்துக்குவோம். நீ அழுகாதே!" என்று அவளது கண்ணீரை துடைத்து விட அவள் இரு பக்கமும் தலையை ஆட்டி "இல்லை" என மறுத்தாள். ஆனாலும் வாய்திறந்து பேச வரவில்லை அவளுக்கு. துக்கம் தொண்டையை அடைத்தது.



மஞ்சரியின் பேச்சில் தன் நிலை மீண்டவன் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு துளசியின் முன் நின்றான். "அட் எனி காஸ்ட்.. எனக்கு என் பங்காருபேபி வேணும். அதுக்கு நீ என் மனைவியா வந்தே ஆகணும். உனது கணவனை பற்றிய டீடைல் சொல். அவனை டிவோர்ஸ் பண்ண அதற்கு தேவையான எல்லா விஷயங்களையும் தான் பண்றேன். உன்னையும் குழந்தையும் திரும்ப அனுப்பு எனக்கு விருப்பம் இல்லை. அனுப்ப முடியாது. தட்ஸ் இட்!" என்று கூறுபவனை பார்த்து காயத்ரி கோபம் கொண்டார்.


"வம்சி என்ன பேச்சு இது? ஒரு பொண்ணு கிட்ட போய் அவ புருஷனை டிவோர்ஸ் பண்ணிட்டு வா.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்ற.. அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா உனக்கு? சமுதாயத்துல இதை பார்க்கும் போது அவளையும் உன்னையும் தரக்குறைவா பேசுவாங்க. வேறு மாதிரியான அர்த்தமெல்லாம் வரும். உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? அவங்க ரெண்டு பேரையும் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடுத்துக்க.. நான் ஒரு வார்த்தை மறுப்பு சொல்ல மாட்டேன்! ஆனால் இது எனக்கு என்னமோ சரியா படல" என்று காயத்ரி படபடவென கூறினார்.



ராமகிருஷ்ணனுக்கு அதே எண்ணம்தான். ஆனால் இன்று எல்லாத்தையும் முற்றுமுழுதாக பேசி ஆக வேண்டும் என்று மறுபடியும் துளசியை பேச வைத்தார்.



"ஏன் மா துளசி.. வம்சி சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு. திரும்பி ஒன்னை அந்த இடத்திற்கு கொண்டு போய்விட முடியாது. உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை என்றாலும் அந்த ஆளை டிவோர்ஸ் பண்ணிட்டா பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வராது இல்லையா? உனக்கு நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருப்போம். என்ன சொல்ற?" என்று கேட்க அவளால் பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்து தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.



"பொதுவாக இந்திய பெண்கள் அதுவும் கிராமத்தில் வாழும் வளரும் பெண்களுக்கு தாலி சென்டிமென்ட் அதிகம். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்! திரும்பவும் அந்த சாக்கடைக்கு போய் கஷ்டப்பட போறியா துளசி?" என்று மஞ்சரி கோப்த்துடன் கேட்க.‌.. "மஞ்சரி!!" என்று விக்ரமும் மஞ்சரியை முறைத்து பார்த்து "கொஞ்சம் சும்மாயிரேன் மஞ்சரி. அவளும் பாவம் தானே.. ஆளாளுக்கு மாறி மாறி பேசினா என்னதான் பண்ணுவா?" என்றதும் விக்ரமை பார்த்து நன்றியோடு மெல்ல புன்னகைத்தாள் துளசி.



"சரி சொல்லு.. உன் புருஷனும் இதுக்கு உடந்தைனு தெரியுது. அவன பத்தி டீடெயில்ஸ் வேணும். சொல்லு? முதல்ல உன்னையும் குழந்தையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம்" என்று வம்சி விடாப்படியாக நிற்க மற்றவர்களின் முகத்திலும் அதே கேள்வியை தாங்கி நிற்க, அந்த அழுத்தம் தாங்க முடியாமல் எழுந்து நின்ற துளசி "எனக்கு புருஷன் யார் என்றே தெரியாது!" என்று கத்தினாள் அந்த வீடே அதிரும் படி.


"என்னது புருஷன் யாருனே தெரியாதா??" என்று மீண்டும் அதிர்ச்சி. அதிர்ச்சிக்கெல்லாம் பேரதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு தூரம் குழந்தையை பலியிட இவளையும்.. இவளை போன்ற மற்றவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் ஆகாமல் எப்படி? இதில் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ? என்று எல்லோர் முகத்திலும் குழப்பமும் பதட்டமும் தாண்டவமாடியது.


"இல்லையே அன்னைக்கு உன்னை தேடி வந்த கும்பலில் ஒருத்தன் நான் தான் துளசி புருஷன் என்று சொல்லி என் கிட்ட சண்டை போட்டானே.. இன்னொருத்தனும் துளசியோட கேரக்டர் சரியில்லைன்னு சொல்லி உனக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வைத்து விடலாம் என்றும் இவள் உனக்கு வேண்டாம்டா என்றும் சொன்னார்கள். உன்னை அனுப்பவில்லை என்றால் அப்படி எல்லாம் நடக்கும் என்று என்னிடம் பயம் காட்டவே அப்படி எல்லாம் பேசினார்கள். அப்போ அது எல்லாம்??" என்று குழப்பத்துடனே கேட்டான் விக்ரம்.



அவன் யாரென்றே எனக்கு தெரியாது என்று மறுபடியும் துளசி கண்ணை மூடி கொண்டு கதறி அழுதாள். அவளின் அழகை மற்றவர்களை உள்ளத்தை உருக வைத்தது என்றால் வம்சிக்கோ தலைவலி வந்தது.



"ஏய் வாய மூடு!!" என்று அந்த வீடு அதிரடி அவன் கத்த.. கையில் இருந்த குழந்தை திடுக்கிட்டு அந்த சத்தத்தில் பயந்து வீறிட்டு அழ ஆரம்பிக்க.. சட்டென்று தன் மார்பிலேயே அந்த குழந்தையை தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தினாலும் நிற்கவில்லை அழுகை. குழந்தையை துளசியிடம் கொடுத்து "பசியாத்திட்டு வா!" என்று அறைக்குள் அனுப்பி வைத்தான் வம்சி.



"என்ன வம்சி.. அந்த பொண்ணு என்ன என்னமோ சொல்லுது ஏதோ ஃபேமிலி பிராப்ளம் அந்த மாதிரி எதுவும் இருக்கும் அப்படின்னு தான் நான் நினைச்சேன். பலினு சொல்லுது.. புருஷன் இல்லை என்று சொல்லுது.. இன்னும் என்னென்ன விவகாரம் எல்லாம் இருக்கும்ன்னு தெரியலையே டா. எனக்கு பயமா இருக்கு. வம்சி இதனால உனக்கோ விக்ரமிற்கோ பிரச்சனை வராது தானே?" என்று தாயாக தன் மகன்களின் மேல் அக்கறை கொண்டு கேட்டார் காய்திரி.



"பிரச்சனை தான். ஆனால் அந்தப் பிரச்சினை அந்த பொண்ணோட மட்டும் சம்மந்தப் பட்டதில்லை. நம்ம குவாரிவோடவும் சம்பந்தப்பட்டது. துளசி இப்பொழுது இங்கே வரலைன்னா.. இப்படி ஒரு பிரச்சனை எல்லாம் அங்கே நடப்பது நமக்கு தெரிந்திருக்காது. கூடவே நம் குவாரியும் நம் கையை விட்டு போகிற நிலைமை கூட வந்திருக்கும். அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய நம்ம குவாரியின் நிலைமையையும் என்னென்ன நமக்குத் தெரியல.. கொஞ்ச நாள் இந்த புது பிசினஸ் பண்ற வேலைல நான் அதை கவனிக்க தவறி விட்டேன். இனி முழுக்க முழுக்க குவாரி தான்!! கடப்பாவுக்கே போய்விடுகிறேன்.. போயீ இருக்கு அவனுங்களை!!" என்று கை முஷ்டியை முறுக்கி கண்களில் கோபம் மின்ன அழுத்தமாக கூறினான் வம்சி.



குழந்தைக்கு பசியாற்றி கொண்டிருந்த துளசி எண்ணங்களும் எங்கோ சென்று கொண்டிருந்தது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இடையில் எத்தனை எத்தனை துன்பங்கள் அவற்றையெல்லாம் தாண்டி இதோ கைகளில் தேவதை என குழந்தை.. தன் பொக்கை வாய் சிரிப்பிலும் ங்கா என்று அழைப்பிலும் மனம் உருகி தான் போனது. ஆனால் இந்த குழந்தையின் பிறப்பு பற்றி வெளியில் கூற முடியுமா? இல்லை யாரும் தான் நம்புவார்களா? குந்தியைப்போல் அவளது நிலை. 

"ஆனால் கர்ணனை போன்று உனக்கு கஷ்டங்களும் வருத்தங்களும் அவமானங்களும் வராது.. வர விடமாட்டான் வம்சி!" என்ற எண்ணம் அவளுக்கு அழுத்தமாக இருந்தது.‌ 



"யாரு என்ன என்று தெரியாத என்னை இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் திருமணம் செய்துகொள்ள ஒத்துக் கொள்கிறான் என்றால் அது இந்த குழந்தைக்காக தானே.. குழந்தையின் மீது அவன் வைத்திருக்கும் இந்த பாசம் மட்டுமே அதற்கு காரணம். அதனால் என் மகள் அதிர்ஷ்டசாலிதான்! என் போல் இல்லை" என்று தூங்கும் மகவை மடியில் வைத்து மெலிதாக அதன் கன்னம் வருடிக் கொண்டிருந்தவள் "ம்க்கும்" என்று கணைக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கே.. வாசலில் நின்று கொண்டிருந்தான் வம்சி.



"தூங்குற குழந்தை யாராவது கொஞ்சுவாங்களா? கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா? குழந்தைக்கு பால் கொடுத்தா முதுகுல போட்டு தட்டி கொடுக்கனும் என்கிற அறிவும் இல்லை" என்று வழக்கம் போல் கோபத்தோடு இவன் பேசினாலும் அதன் பின் இருந்த குழந்தை மீதான பாசமும் அக்கறையும் துளசிக்கு நன்றாக புரிய ஏனோ இந்த முறை அவளால் அவன் மீது வருத்தப்பட முடியவில்லை. மாறாக உள்ளுக்குள் சந்தோஷமே.


அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க "என் மூஞ்சில ஏதாவது எழுது போட்டிருக்கா?" என்று மீண்டும் கத்தரித்த மாதிரியே பேசியவன் குழந்தையை தூக்கி முதுகில் சிறிது நேரம் போட்டு தட்டி அவள் லேசாக ஏப்பம் விட்டவுடன் மீண்டும் டவுலை தண்ணீரில் நனைத்து எடுத்து அவளது உதடு கன்னங்கள் எல்லாம் துடைத்து அதன் பிறகு படுக்கையில் விட்டான்.


"வா!!" என்று அழைக்க எதற்கு என்றுதான் அவளுக்கு தெரியுமே இன்னும் வரவேற்பறையில் தான் அனைவரும் காத்திருந்தனர். இந்த விஷயத்தை இன்றோடு முடித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ராமகிருஷ்ணனும் காயத்ரியின் முனைப்பாக இருந்தனர். துளசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று மஞ்சரி பரிதாபப்பட்டுக் கொண்டிருக்க, விக்ரமும் துளசியின் வாழ்க்கையோடு எவ்வாறு குவாரி சம்பந்தப்பட்டிருக்கும்? அன்னைக்கு வந்தவங்க எல்லாம் யாரு? என்று அவனும் சிந்தனையில் இருந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்.



வம்சியும் துளசியின் வந்தவுடன் இருவரையும் பார்த்து "சொல்லு துளசி அடுத்து என்ன நடந்தது? உனக்கு புருஷன் இல்லேன்னா.. குழந்தை எப்படி?" என்று கேள்வியால் துளைத்து எடுத்தார் காயத்ரி.



"என்னை போல தெரிந்தெடுக்கப்பட்ட பொண்ணுங்களை எல்லாம் யார் கண்ணிலும் படாமல் தனியாகத்தான் வளர்ப்பார்கள். ஏன்னா எங்களோட அழகோ எதுவோ மத்தவங்களுக்கு சலனம் தரக்கூடாது. அதேபோல மனதாலும் நாங்கள் சஞ்சலப்படவோ சலனபடவோ என்கிறத்துக்காக தனியாத்தான் வளர்த்தாங்க. அந்த குறிப்பிட்ட நாள் வந்தவுடனே அய்யாவு பெரிய பெரிய பூஜை எல்லாம் பண்ணுவாங்க.. நடுராத்திரி என்னை குளிக்க வைத்து மணப்பெண் போல் அலங்கரித்து பூஜை செய்வாங்க. ஆனால் மணமகன் யாரும் கிடையாது. அய்யாவுடைய சம்சாரம் தான் என் கழுத்தில் ஒரு கயிறு கட்டுவாங்க அந்தக் கயிறு தாலி மாதிரி ஒன்னுனு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் அவங்களோட மந்திரத்தால் என்னை.. என்னை..." என்று உதடு கடித்து அழுகையை அடக்கினாள்.



அவள் சொல்ல வருவது புரிந்தும் புரியாத நிலையில் அனைவரும். இடையிடையே அவள் பேசிய தெலுங்கு எல்லாம் மற்றவர்களுக்கு வம்சி தான் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தான்.



மஞ்சரி துளசியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு "சொல்லு.. அழுகாதே.. அப்பதான் நாங்களும் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்று மென்மையாக கேட்க கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு "எங்களை வசியம் பண்ணிடுவாங்க.. நாங்க யார் கூட ஒன்னா இருக்கும்னு எங்களுக்குத் தெரியாது. அவங்க சொல்ற அந்த நல்ல மட்டும் இருப்போம். அடுத்த ஒரு வாரம் இது போல அடிக்கடி நடக்கும். அதுக்கப்புறம் மீண்டும் எனக்கு தனிமை தான். நான் கர்ப்பம் ஆனவுடன் அவங்களுக்கெல்லாம் சந்தோஷம். இந்த கர்ப்ப காலம் முழுவதும் தனியாதான் இருந்து சில பெண்கள் குழந்தை பிறந்ததும் குழந்தையைப் பலி கொடுத்துட்டு வேற ஒருத்தனை அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்க.. அந்த பொண்ணு யாரு கூட இருந்தா? எப்படி வந்தது குழந்தை? என்று அவளுக்கும் தெரியாது.. எனக்குமே தெரியாது!!" என்று கைகளை விரித்து கூறியவள் தன்னை எங்கே எல்லோரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் உதடுகள் எல்லாம் துடிக்க மஞ்சரியை இறுகப் பற்றிக்கொண்டாள்.


"என்ன மாதிரி கொடுமை இது? எதுவுமே தெரியாம ஒரு பெண் குழந்தையை சுமக்கிறாள் என்றால்..ஸஅவளுடைய நிலை?" என்று அங்குள்ளவர்கள் துளசியை நினைத்து வருந்தி கொண்டிருக்க.. வம்சி தொண்டையை கணைத்து அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தான். "இன்னும் ரெண்டு நாள்ல எது நல்ல நாளோ அன்னைக்கு எங்க கல்யாணம் குன்றத்தூர் முருகன் கோயிலில்.. பார்த்து செக் பண்ணிடுங்க அம்மா" என்றவன், தன் அறையை நோக்கி வேகமாக சென்று விட்டான்.



'இவ்வளவு தெரிந்த பின்னும் எப்படி கல்யாணம்??' என்று வழக்கம் போல அனைவரும் அதிர்ந்து செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


தொடரும்..




குழந்தையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மஞ்சரி தான் மெதுவாக விக்ரமின் கையை சுரண்டி "என்னங்க உங்க அண்ணா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுக்கிறார். அவரையும் குழந்தையையும் பாக்குறவங்க அவரோட குழந்தையின் தானே சொல்லுவாங்க. ஏன் இப்படி பண்றாரு? குழந்தை மேல பாசம் இருக்க வேண்டிய தான் இது ஓவர் ஃப்லோவா இருக்கு?" என்று கிசுகிசுத்தாள்.


விக்ரம் அண்ணனின் இந்த புதிய பரிமாணத்தில் வியந்து வாயை பிளந்து மனைவி கிசுகிசுத்ததுக்கு தலையசைத்து ஆமோதித்தான்.


காயத்திரிக்கும் இது ஆச்சரியம் தான். கோவிலுக்கு செல்லவேண்டும் என்றால், வேட்டியை கண்டால் முகம் சுளிப்பவன் இன்று துளசி மகளோடு மேட்ச் மேட்சாக வந்ததை பார்த்து வாயடைத்து நின்றார். இப்படியாக குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மனநிலையில் வைத்த வம்சியோ சந்தோச மனநிலையோடு பங்காரு பேபியை தூக்கியவாறு வந்தவன் "என்ன எல்லாரும் இப்படியே நிக்கிறீங்க? ஃபங்ஷனுக்கு டயம் ஆகுது. வாங்க.. வாங்க" என்று குழந்தையை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க.. எல்லோரும் செய்து வைத்த பொம்மை போலவே அவன் பின்னால் நடந்து சென்றனர். இவர்களுக்கே இப்படி என்றால் துளசிக்கு கேட்கவா வேண்டும்? 


வம்சியின் கோபத்தையும் ரௌத்திரத்தையும் ஆத்திரத்தையும் அதில் தெறிக்கும் வார்த்தைகளையும் கூட அவளால் தாங்க விடமுடியும் போல இவனும் காட்டும் இந்த அன்பையும் பாசத்தையும் துளி கூட ஜீரணிக்க முடியாமல் தவித்துப் போய் நின்றாள்.



பெற்ற குழந்தையை தூக்கி கொடுத்து விட்டு தாய் அவள் தவித்த நிற்க. பெறாத குழந்தைக்கு தந்தையாகி தானே குழந்தையை தொட்டிலில் இட்டவன் "பேரு யாராவது யோசித்து வச்சிருக்கீங்களா?" என்று கேட்டான் குடும்பத்தினரை பார்த்து.



எங்கே குழந்தை பிறந்தது முதல் இவனது அட்ராசிட்டியை ஆச்சரியத்தோடு பார்த்த குடும்பத்தினருக்கு அதைப்பற்றி எண்ணமே இல்லை. துளசிக்கு மனதில் அவள் விரும்பும் பார்வதிதேவியின் பெயரை வைக்க வேண்டும் என்று ஆசை.

எங்கே அதை சொன்னால் இவன் கோபித்துக் கொள்வானோ என்று கையை பிசைந்து கொண்டு மஞ்சரியிடம் கண்களால் கெஞ்சினாள்.



குழந்தையை தூக்கினாலே பாய்ந்து வந்து பிடிங்கி கொள்கிறான் இதில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால் விட்டு விடவா போகிறான் என்று உணர்ந்த மஞ்சரி சரி நடப்பது நடக்கட்டும். காரணமின்றி காரியம் எதுவும் நடக்காது என்று நினைவோடு பெரிய அத்தானை பார்த்து "எங்களுக்கெல்லாம் ஆசை இருந்தாலும் நீங்க விடவா போறீங்க? நீங்களே வைங்க உங்க பங்காரு பேபிக்கு.. அப்படி என்ன அதிசயப் பேரு வைக்கிறிங்கனு நானும் பார்க்கிறேன்!" என்றாள்.


"ஆஹா.. ஆசையில்லையா நிஜமாவே வா?" என்றவன் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்தவனின் விழிகள் துளசியின் மீது அழுத்தமாக படிந்தது.



அவளோ அவனது அழுத்தமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து போய் மஞ்சரியின் பின்னால் மறைந்து கொண்டு ஆள்காட்டி விரலால் மஞ்சரியின் கையை சுரண்டி "அக்கா என் மனசுல ஒரு பேர் இருக்கு. நான் சொல்லட்டுமா? நீங்க உங்க பெரிய அத்தான் கிட்ட சொல்றீங்களா?" என்று முணுமுணுத்தாள். "நல்ல ஆளை பார்த்த போ.. நான் வாயைத் திறந்தாலே ஏதாவது பேசி அடைத்துவிடுவார். இப்போ பேரு வைக்கிற படி வைக்கட்டும். நாம கூப்பிடறது தானே.. நமக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்டுக்கலாம். இப்ப ஏதும் பிரச்சனை பண்ண வேண்டாம்" என்று அவளை அடக்கி வைத்தாள் வம்சியின் குணமறிந்து.


சரி என்று துளசி தலையாட்ட அவர்களின் சம்பாஷணையை பார்த்தாலும் வம்சி ஏதும் கூறாமல் "அப்ப சரி நானே என் பங்காரு பேபிக்கு பெயர் வைக்கிறேன்" என்றவன் குழந்தையை அழகாக தன் கைகளில் ஏந்தி அவளது காதில் "மான்சி.. மான்சி.. மான்சி" என்று மூன்றுமுறை அழைத்தான். பிரத்யேகமாக வரவழைத்த சுத்தமான தேனை குழந்தையின் நாவில் தடவினான். அது சப்புக் கொட்டி ருசித்து கை கால்களை உதைத்து குதுகளித்தது.



"மான்சி.. பேரு நல்லாத்தான் வச்சிருக்காங்க" என்று சந்தோஷப்பட்ட மஞ்சரி முதல் ஆளாக போய் குழந்தையின் நாக்கில் தேன் வைத்து காதில் பெயரை சொல்லி விட்டு வர.. அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்கள் சொல்ல.. துளசி நடுங்கும் கரங்களால் தன் குழந்தையை ஏந்தி காதில் அப்பெயரை செல்ல தொட்டில் அருகே நின்று கொண்டிருந்த வம்சி அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் "மான்சினா பார்வதியின் அர்த்தம்" என்றான்.


துளசி திகைப்பாய் வம்சியை பார்த்தாள் "என் மனதில் நினைத்தது உனக்கு எப்படி தெரியும்?" என்ற பார்வையோடு.. அவளின் பார்வையோடு தன் பார்வையை கலந்தவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து வந்து இருந்த உறவினர்களையும் விருந்தினர்களையும் உபசரித்தான்.

ஆனால் துளசியின் பார்வை அவனையே பின்தொடர்ந்தது.


மஞ்சரியும் காயத்திரியும் விருந்தினர்களை உபசரித்து பேசி சிரித்துக் கொண்டிருக்க விக்ரம் கூட அங்கே பப்பே முறையில் நடக்கும் உணவு உபசரிப்பை பார்த்தவாறு நின்றிருந்தான். ஆனால் ராமகிருஷ்ணன் மட்டுமே இருவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார்.



சிறிது நேரத்தில் பசியில் குழந்தை அழ ஆரம்பிக்க.. துளசி கையில் வைத்து தாலாட்ட அப்பவும் குழந்தையின் அழுகை நிற்காமல் போக.. தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். பசியில் இன்னும் வீறிட்டு அழுதது குழந்தை. எங்கிருந்துதான் வந்தானோ அத்தனை கூட்டத்திலும் அவ்வளவு சத்தத்திலும் குழந்தையின் அழுகையை கேட்டு வம்சி.



"அறிவிருக்கா உனக்கு குழந்தை பசியில் அழுறா.. இங்க வச்சு என்ன வேடிக்கை உனக்கு? உள்ள ரூம் போய் பசியாத்து.. இல்ல என்கிட்ட கொடு நான் பார்த்துக்கிறேன்" என்று மெல்லிய குரலில் அதிகாரமாக அவன் கேட்க, ஏற்கனவே அங்கு உள்ளவர்களுக்கு இது யார் குழந்தை? வம்சியின் நெருக்கத்திருக்கும்.. ஒரே கலர் ஆடைக்கும் என்ன அர்த்தம் என்பது போல கிசுகிசு ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு சிகரம் வைத்தாற்போல துளசியை அத்தனை பேர் முன்னிலையிலும் நெருக்கமாக நின்று தாழ்ந்த குரலில் கண்டித்த வம்சியை சுற்றியிருந்து பார்த்தவர்களுக்கு ஏதோ இவர்கள் இருவரும் காதல் தம்பதிகள் போலும் அவர்களின் பேச்சும் அவ்வளவு அன்யோன்யமாக பட்டது.


காயத்ரியும் ராமகிருஷ்ணனிடமும் யாரு கேட்டாலும் என் பேத்தி என்றதோடு நிறுத்தி கொள்ள.. வந்தவர்களும் தங்களுக்குள் ஒருவித கதையை புனைந்து கொண்டு சென்றனர். 



ஆனால் ராமகிருஷ்ணனுக்கு இந்த விஷயத்தை முடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. இது தொடர்ந்தால் வம்சியின் வாழ்க்கைக்கு நல்லதல்ல.. துளசியின் வாழ்க்கைக்கும் நல்லதல்ல. இதை விட அந்த குழந்தையின் எதிர்காலம் இன்னும் பல பேச்சுகளுக்கும் கேள்விகளுக்கும் ஆளாக நேரிடும் என்று உணர்ந்தார். முதல் இரண்டு நாள் அமைதியாக இருந்தார்.



அன்று ஞாயிற்றுக்கிழமை இப்போதெல்லாம் அதிகம் வம்சி ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தங்குகிறான். இரவு லேட்டாக வந்தாலும் காலையில் அன்னம்மாவை விட்டு குழந்தையை தூக்கி வர செய்து தன் அறையில் சிறிது நேரம் வைத்து விளையாடி விட்டு எழுந்து கீழே வருவான் குழந்தையோடு.


வம்சி சோபாவில் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருக்க விக்ரம் அருகில் மஞ்சரியோடு ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தான். கையில் நியூஸ் பேப்பரை வைத்து இருந்த ராமகிருஷ்ணன் மகன்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தார். காயத்ரியும் துளசியும் காலை உணவு தயாரிக்க சமையல் அறையில் இருந்தனர்.



"வம்சி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"


"சொல்லுங்கப்பா" என்றான் குழந்தையிடம் கைகளால் சொடுக்கு போட்டு விளையாட்டுக் காட்டிக்கொண்டே.. "துளசிக்கு நாம ஒரு வழி செய்யணும் இல்லையா? எவ்வளவு நாளைக்கு நம்ம வீட்டிலேயே வைத்திருக்க முடியும். அந்த பொண்ணும் தன் காலில் நின்றால் தான் நாளைக்கு இந்த குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியும் இல்லையா?" என்று கேட்டார்.


"என் மான குட்டிக்கு என்ன? என் மானு குட்டியை நான் நல்லபடியாக தான் வளர்ப்பேன். உங்களுக்கு என்ன அதுல வருத்தம்" என்று கொஞ்சும் குரலிலேயே குழந்தையை பார்த்து தந்தைக்கு பதிலளித்தான்.



நீ சொல்ற பதில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை வம்சி" என்று அவர் சற்று கண்டிப்போடு கூறினார்.



அதுவரை இருந்த இலகு தன்மையை கைவிட்டவன் குழந்தையை மடியில் வாகாக படுக்க வைத்துக் கொண்டு தந்தையை நேராக பார்த்தவன் "சொல்லுங்க என்ன சொல்லணும்" என்ற வார்த்தையில் வம்சி மீண்டு இருந்தான்.



"நம்ம குவாரியில் என்ன நடக்குதுன்னு தெரியல.. எதுக்காக துளசியை துரத்திட்டு வந்தாங்கன்னு தெரியல. அன்னைக்கு நைட்டு துளசிக்கு என்ன நடந்தது ஏன் அவளை ஆளுங்க பின் தொடுத்து வந்தாங்க இதெல்லாம் தெரிஞ்சிக்கணும் இல்லையா? அதை விட உன்னுடைய இந்த பாசம் குழந்தை மேல எங்களுக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்குது. நாளை பின்ன உனக்கு கல்யாணம் நடந்தா.. உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு குடும்பத்துக்கும் இடையில் இந்த குழந்தையால் ஏதேனும் சண்டை சச்சரவு வந்தால் நல்லா இருக்குமா? சொல்லு?" என்று ராமகிருஷ்ணன் விடாமல் பேசிக் கொண்டே செல்ல ஒரு கையை தூக்கி நிறுத்தி "என்ன சொல்லணும் அதை நீ நேரடியா சொல்லுங்க. எதுக்கு இவ்ளோ தூரம் சுத்தி வளைச்சு பேசுறிங்க?" என்று கேட்டான்.



"துளசியையும் அவள் பெண்ணையும் நாம பத்திரமாக வைக்கனும். அதே சமயம் ஒரு நல்ல வேலையையும் கொடுக்கணும். இந்த குழந்தை மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாயே உனக்கு பிறக்கப் போற குழந்தை மீது எவ்ளோ பாசம் வைப்ப.. எங்களுக்கும் எங்கள் பேரன் பேத்தியை பார்க்க ஆசை இருக்கு. அதனால கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்க" என்றவரை பார்த்தவன் "என் வாழ்க்கையில கல்யாணம் இல்லப்பா. உங்களுக்கு சந்ததியினு வந்தா அது தம்பி மூலம் தான்" என்றான் எங்கோ வெறித்துக்கொண்டு.



"என்னடா சொல்ற வம்சி? நீ ஏன் இப்படி சொல்ற? எனக்கு நெஞ்சமெல்லாம் பதறுதே.. ஏதாவது காதல் தோல்வியா டா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? எதா இருந்தாலும் அம்மாட்ட சொல்லுடா வம்சி" என்று அவனின் வார்த்தையில் கலங்கி துடித்தார் காயத்ரி.


இங்கே நடக்கும் பேச்சு வார்த்தைகள் பெரிதாக துளசிக்கு புரியவில்லை. இத்தனை நாட்களில் ஓரளவு சின்ன சின்ன வார்த்தைகள் தான் தமிழில் பேசினாள். இப்படி தொடர்ச்சியாக பேசினால் அவளால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



"அதான் சொல்றேன் மா.. என்.. என் மூலமா உங்களுக்கு பேரனோ பேத்தியோ வராது. விக்ரம் மூலமாத்தான்.. அப்படி உங்களுக்கு என்னையும் குடும்பமாக பார்க்கணும் நினைத்தால்.." என்று நிறுத்தியவன் தன் குடும்பத்தினரை ஒவ்வொருவராகப் பார்த்து "துளசியை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. மான்சி உங்க பேத்தியா இருப்பா" என்றான்.


"என்னது??" என்று குடும்பம் மொத்தமே அதிர்ச்சியோடு வம்சியை பார்த்தது. துளசி அவன் பேசியதை பாதி புரிந்தும் பாதி புரியாமல் புரிந்த வரையில் அதிர்ச்சியாகி மயங்கி விழுந்தாள்.



தொடரும்...